Skip to main content

7 மாவட்ட திமுக நிர்வாகிகள் அதிரடி நீக்கம்!

Published on 01/07/2018 | Edited on 01/07/2018
smk


ஏழு மாவட்ட திமுக நிர்வாகிகளை அதிரடியாக நீக்கம் செய்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

’’தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தி.மு.க. நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட மாவட்டங்களில் நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

 

மதுரை மாநகர் மாவட்டம் பழங்காநத்தம் பகுதி கழக செயலாளர் ஓச்சுபாலு அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தவமணியும், நெல்பேட்டை பகுதி 52-வது வட்டக் கழக செயலாளர் டி.பாலா (எ) பாலசுப்பிரமணியன் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆர்.ரமேஷ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  மேலூர் ஒன்றிய செயலாளர் ரகுபதி விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆர்.குமரன் பொறுப்பாளராகவும், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் துரை புகழேந்தி விடுவிக்கப்பட்டு எஸ்.கிருஷ்ண மூர்த்தி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் உக்கிரபாண்டி விடுவிக்கப்பட்டு சுதாகரன் பொறுப்பாளராகவும், சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் மூக்கையா விடுவிக்கப்பட்டு ஜெயச்சந்திரன் பொறுப்பாளராகவும், திருமங்கலம் நகர செயலாளர் டி.நாகராஜன் விடுவிக்கப்பட்டு சி.முருகன் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

பெரியகுளம் ஒன்றிய செயலாளர் எல்.போஸ் விடுவிக்கப்பட்டு எல்.எம்.பாண்டியன் பொறுப்பாளராகவும், தேனி ஒன்றிய செயலாளர் ரத்தின சபாபதி விடுவிக்கப்பட்டு எம்.சக்கரவர்த்தி பொறுப்பாளராகவும், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் முருகேசன் விடுவிக்கப்பட்டு ஆர்.அண்ணாதுரை பொறுப்பாளராகவும், உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர் குமரன் விடுவிக்கப்பட்டு அணைப்பட்டி முருகேசன் பொறுப்பாளராகவும், கம்பம் நகர செயலாளர் கிங்.செல்லப்பாண்டி விடுவிக்கப்பட்டு துரை நெப்போலியன் பொறுப்பாளராகவும், பெரியகுளம் நகர பொறுப்பாளர் அபுதா கீர் விடுவிக்கப்பட்டு எஸ்.பி.முரளி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

காளையார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்தி என்ற சத்தியநாதன் விடுவிக்கப்பட்டு ஆர். எம்.கென்னடி பொறுப்பாளராகவும், சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப.முத்துராமலிங்கம் விடுவிக்கப்பட்டு சுப. சின்னத்துரை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.சி. கனகராஜன் விடுவிக்கப்பட்டு ஜீவானந்தம் பொறுப்பாளராகவும், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் ஆர்.வேலாயுதம் விடுவிக்கப்பட்டு தி.சக்தி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

மதுரை மாநகர் மாவட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. அதன்படி மதுரை மாநகர் வடக்கு, மதுரை மாநகர் தெற்கு என செயல்பட்டு வரும் 2 மாவட்டங்களும் இனி மதுரை மாநகர் மாவட்டம் என ஒரே அமைப்பாக செயல்படும்.  இவ்வாறு அமையும் மதுரை மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கோ.தளபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக வேலுசாமி, குழந்தைவேலு, எஸ்ஸார் கோபி, சின்னம்மாள், பொன்.மு.சேதுராமலிங்கம், ஜவஹர், ஜெயராமன், தமிழரசி, டாக்டர் சரவணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

தேனிமாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதில் கம்பம் ராமகிருஷ்னன் மாவட்ட கழக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சுப.த.தியாகரன் விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதில் கே.முத்து ராமலிங்கம் புதிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  ராதாபுரம் ஒன்றிய செயலாளர் கோ.கேசவன் விடுவிக்கப்பட்டு வி.எஸ்.ஆர் ஜெகதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் விடுவிக்கப்பட்டு முத்துப்பாண்டி என்ற பிரபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

நான்குநேரி ஒன்றிய செயலாளர் என்.வானுமா மலை விடுவிக்கப்பட்டு ஆர்.எஸ்.சுடலைகண்ணு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அம்பாசமுத்திரம் ஒன்றிய செயலாளர் சிவகுருநாதன் விடுவிக்கப்பட்டு சிவனுபாண்டி என்ற பரணி சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

குருவி குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் சேர்மதுரை விடுவிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  மேலநீலித நல்லூர் ஒன்றிய செயலாளர் ராஜா விடுவிக்கப்பட்டு விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் சூட்டுசாமி விடுவிக்கப்பட்டு அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  சங்கரன்கோயில் நகர செயலாளர் சங்கரன் விடுவிக்கப்பட்டு ராஜதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அருள் மணி விடுவிக்கப்பட்டு பி.அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  விளாத்திக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் வேலாயுத பெருமாள் விடுவிக்கப்பட்டு ஜெயக்குமார் பொறுப்பாளராகவும், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் விடுவிக்கப்பட்டு கருப்பசாமி பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

 

ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் சி.வைகுண்டம் விடுவிக்கப்பட்டு கொம்பையா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  குளச்சல் நகர செயலாளர் ஆ.நசீர் விடுவிக்கப்பட்டு அப்துல்ரகீம் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
திருவட்டார் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் விடுவிக்கப்பட்டு ஜான் பிரைட் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.’’

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரும் தீர்மானம் நிறைவேற்றம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Implementation of the decision to conduct a caste-wise census

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் காலை (26.06.2024) வழக்கம் போல் தொடங்கியது. அப்போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டனர். அச்சமயத்தில் சபாநாயகர் அப்பாவு கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் அதிமுகவினர் இருக்கையில் அமராமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இந்நிலையில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை ஆற்றினார். அதில், “இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமையும், சம வாய்ப்பும் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் என்று இப்பேரவை கருதுகிறது.

எனவே 2021 ஆம் ஆண்டு மேற்கொண்டிருக்க வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டுமென்றும், அத்துடன் இம்முறை சாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்தவேண்டும் என்றும் மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், “இந்தத் தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டு அமர்கிறேன்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து முதலமைச்சரின் தனி தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்ப்பினர்களான வேல்முருகன், செல்வப்பெருந்தகை, ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு பேசினர். அதனைத் தொடந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் வாக்கெடுப்பு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

Next Story

“அதிமுக வீண் விளம்பரம் தேடுகிறது” - முதல்வர் மு.க. ஸ்டாலின் விளாசல்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
CM MK Stalin says ADMK is looking for advertisement

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள்  காலை (26.06.2024) வழக்கம் போல் தொடங்கியது. முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து முன்னதாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.

இதனையடுத்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்டுள்ளனர். 8 நிமிடங்கள் அவையை நடக்கவிடாமல் செய்து இருக்கிறீர்கள். இருக்கையில் அமரவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். 

CM MK Stalin says ADMK is looking for advertisement

இது தொடர்பாக அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில், “பிரச்சினையை சபையில் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு. நாங்களும் பேசி இருக்கிறோம். கருப்புச் சட்டை அணிந்து வந்து ஊடகத்திடம் பேசிவிட்டு வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். விளம்பரத்துக்காகவே அதிமுகவினர் தொடர்ந்து விதிகளுக்கு முரணாக செயல்படுகின்றனர்” எனத் தெரிவித்தார். அதன்பிறகு அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என பேரவை விதிகளை சபாநாயகர் சுட்டிக்காட்டிய பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்ட நிலையில் இந்த நடவடிக்கைய சபாநாயகர் அப்பாவு எடுத்துள்ளார்.

சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டதற்குப்பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிக் கட்சியினர், குறிப்பாக அதிமுக எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க அரசு தயாராக உள்ளது என்று சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தெளிவாக இந்த அவையில் தெரிவித்து வருகிறேன். 

CM MK Stalin says ADMK is looking for advertisement

சபாநாயகரும் அதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், மக்கள் பிரச்சனையைப் பற்றி சட்டப்பேரவையில் பேச வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தும், அதை ஏற்க மனமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியில் சென்று பேசுவது என்பது இந்தப் பேரவையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல. பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அதிமுக மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது. ஆனால், நாம் இந்தத் துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. இதுதான் நமக்கும், அவர்களுக்கும் உள்ள வேறுபாடு”எனத் தெரிவித்தார்.