Skip to main content

புயல் கரையை கடக்கும்போது என்ன செய்ய வேண்டும்? தேசிய பேரிடர் ஆணையம் அறிக்கை

Published on 15/11/2018 | Edited on 15/11/2018
storm



புயல் கரையை கடக்கும்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தேசிய பேரிடர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 

புயல் வருவதற்கு முன்பு சமூக வலைதளங்களில் வரும் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.
 

தகவல்களை செய்தித்தாள், செய்தி இணையதளங்கள் மற்றும் தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொள்ளலாம். 
 

ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, கல்விச் சான்று உள்ளிட்ட வீட்டில் முக்கிய ஆவணங்கள் இருந்தால் தண்ணீரில் நனையாமல் இருக்கும்படி பாலிதீன் கவர் கொண்டு மூடி வைத்து பாதுகாக்க வேண்டும். 
 

அதிகமான மழை ஏற்பட்டால் வெளியே போக முடியாத சூழல் ஏற்படும் என்பதால் சில நாட்களை கழிக்க தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். 
 

புயல் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் வெளிச்சத்துக்கு தேவையான பேட்டரி போன்ற மாற்று ஏற்பாடுகள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். 
 

தகவல் தொடர்பு இல்லாமல் போகும்போது டிரான்சிஸ்டர், ரேடியோ போன்றவை பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.
 

மொபைல் போன்களில் சார்ஜ் இருக்குமாறும், சார்ஜ் செய்ய ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். மேலும் போதுமான அளவு பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். 
 

புயல் வரும் நேரத்தில் வசிக்கும் இடம் பழைய வீடாகவோ, அல்லது பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வீடாக இருந்தாலோ முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டம். 
 

வீட்டில் உள்ளவர்களைப்போலவே, கால்நடைகள் மற்றும் விலங்கினங்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவேண்டும். 
 

முக்கியமாக கடலோர மக்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்குள் செல்லாமல் இருப்பது அவசியம். 
 

புயல் கரையை கடக்கும்போது வீட்டுக்குள் அல்லது பாதுகாப்பு மையத்தில் இருப்பது முக்கியமானது. கதவுகள், ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டில் உள்ள மின் இணைப்புகள், சமையல் கேஸ் இணைப்புகளை அணைத்து வைக்க வேண்டும். 
 

புயல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வது அவசியம். மேலும் அரசின் உதவி மையத்துடன் தொடர்பில் இருந்தால் பயன் அளிக்கும். 
 

கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரையே குடிக்க வேண்டும். மேலும் புயலுக்கு பிறகு தொற்று நோய்கள் பரவும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கையில் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும். 
 

 

 


 

சார்ந்த செய்திகள்