Published on 20/03/2018 | Edited on 20/03/2018

இந்து மதவெறியை தூண்டும் விஸ்வ இந்து ரத யாத்தரையை தடுக்க கோரியும், பெரியார் சிலையை உடைக்கும் இந்து மதவெறி கும்பலை தமிழகத்தில் இருந்து அடித்து விரட்ட கோரியும் சென்னை அண்ணாசாலையில், அண்ணா சிலை அருகில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி, மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, காவல்துறையினர் அவர்களை கைது செய்ய முயன்ற போது, காவிகும்பலின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தி, இது பெரியார் பிறந்த மண் என்பதை நீருபிப்போம் என்று ரோட்டில் படுத்து கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து, போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
