Skip to main content

பாஜக அண்ணாமலையின் வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல்!

Published on 20/03/2021 | Edited on 20/03/2021
bjp

 

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. நேற்று (19.03.2021) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ற நிலையில், தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை தற்பொழுது தொடங்கியது.

 

இந்நிலையில் பாஜக சார்பில் அவரக்குறிச்சியில் போட்டியிடும் தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலையின் வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தன்மீதுள்ள வழக்குகள் குறித்த தகவல்களை அண்ணாமலை சரியாக குறிப்பிடவில்லை என எதிர்கட்சியினர் சார்பில் புகார் எழுந்துள்ள நிலையில் அவரது வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையனின் மனு ஏற்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக சார்பில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அவரது மனு ஏற்கப்பட்டுள்ளது. காட்பாடியில் போட்டியிடும் திமுக துரைமுருகனின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புவின் மனுவும் ஏற்கப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி, போடி தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம், அதே போடி தொகுதியில் திமுகவின் தங்கத் தமிழ்செல்வன், கோவில்பட்டியில் அமமுகவின் டிடிவி.தினகரன், திருச்செங்கோட்டில் போட்டியிடும் கொதேமக ஈஸ்வரன், கரூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் விஜயபாஸ்கர், திமுகவின் செந்தில் பாலாஜி, விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திருவண்ணாமலை ஏ.வ.வேலு, கோவையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.   

 

 

 

 
 
 

சார்ந்த செய்திகள்