Skip to main content

நலம் விசாரித்த பிரதமர்... அழைப்பு விடுத்த முதல்வர்!

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

The Prime Minister who inquired about the well-being... the Chief Minister called!

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக முதல்வர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ''இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கரோனா உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்' எனத் தெரிவித்திருந்தார்.

 

வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழக முதல்வருக்கு நேற்று காவேரி மருத்துவமனையில் சிடிஸ் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்பொழுது ஜூலை 28 ஆம் தேதி நடக்கவிருக்கும் 'செஸ் ஒலிம்பியாட் 2022' போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் அழைப்புவிடுத்தார்.

 

முன்னதாக மு.க.ஸ்டாலின் அடுத்தவராம் டெல்லி சென்று நேரில் சந்தித்து பிரதமரை 'செஸ் ஒலிம்பியாட் 2022' போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள அழைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்