Skip to main content

புத்திமதி கூறிய பெரியப்பாவை அடித்தே கொன்ற போதை மகன்!

Published on 20/12/2019 | Edited on 20/12/2019

தேனியில் உள்ள சின்ன சமதர்மபுரம் முத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெத்தணசாமி-சின்னதாய் தம்பதிகள். இவர்களுக்கு ராமகிருஷ்ணன் என்ற மகன் மற்றும் மலர்கொடி, சாந்தா, பார்வதி ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர்.

அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த நிலையில் மனைவி சின்னதாய்க்கு கண் பார்வை போனதால் அதேபகுதியில் வசித்து வந்த மகள் வீட்டில் தஞ்சம் அடைந்தார். பெத்தணசாமி மட்டும் அதேபகுதியில் தனது மகன் முறை உள்ள உறவுக்காரரான சிவகண்ணமூர்த்தி என்பவரது வீட்டி மாடியில் உள்ள சிறிய அறையில் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.

 

theni

 

இந்நிலையில் சிவகண்ணமூர்த்திக்கு கனகவேல் அய்யப்பன் என்ற தம்பி உள்ளார். தாய் தந்தை இறந்த நிலையில் தம்பியை படிக்கவைத்து தன் வீட்டிலே தங்க வைத்துள்ளார். பாலிடெக்னிக் படித்து முடித்து வேலையில்லாமல் சுற்றித் திரிந்த கனகவேல் அய்யப்பன் குடி மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர். தினமும் குடித்துவிட்டு மாடியில் வசிக்கும் தனது பெரியப்பா உறவுமுறை உள்ள பெத்தணசாமியுடனே தங்கி வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்றும் குடித்துவிட்டு வந்த கனகவேல் அய்யப்பனிடம் பெத்தணசாமி ஏன் தினமும் குடித்துவிட்டு வருகிறாய் என அறிவுறை வழங்கியுள்ளார். எனக்கே அறிவுறை சொல்லுகிறாயா என வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் அங்கிருந்த உருட்டுக்கட்டையால் தனது பெரியப்பாவை தலையிலே அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி தரையில் விடுந்துள்ளார் பெத்தணசாமி. போதையில் மயக்கமடைந்து அவரை அணைத்தபடியே படியே இரவு முழுவதும் உறங்கியுள்ளார்.

 

theni


காலையில் போதை தெளிந்தவுடன் எழுந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் பெரியப்பா இருப்பதை கண்டு தனது அண்ணனிடம் கூறியுள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே அவர் உயிரிழந்தார். இதற்கிடையே தனது பெரியப்பாவை கொலை செய்துவிட்டதாக கனகவேல் அய்யப்பன் தேனி காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார்.

அங்கிருந்த காவலர்கள் இவரது பேச்சை நம்பாமல் நீயா கொலை செய்தாய் என்று சிரித்துக் கொண்டே இனிமேல் இங்கே வரக்கூடாது என விரட்டி அனுப்பியுள்ளனர். பின்னர் இரண்டாவது முறையாக காவல் நிலையம் சென்றுள்ளார் தனது உடலில் படிந்திருக்கும் ரத்தக்கரையை காட்டியுள்ளார். பின்னர் தான் காவல் துறையினருக்கு விஷயம் புலப்பட சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை  துவங்கியுள்ளனர்.

பின்னர் கனகவேல் அய்யப்பன் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்