வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் மூத்த சகோதரர் சோமாபாய் மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு தூய்மை இந்தியா திட்டம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் சோமாபாய் மோடி பேசுகையில், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேலை நாடுகளை போன்று இந்தியாவையும், தூய்மையான இந்தியாவாக உருவாக்க வேண்டும்.
![prime minister narendra modi brother somabhai modi arrives vellore one private institutional speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/NFiGLmyPgDthY6yLeDmxQTYZGoXzDxi3_jD4fg9UVIE/1562675413/sites/default/files/inline-images/FB_IMG_1562660189333%20%281%29.jpg)
சிறு வயதில் இருந்தே பிரதமர் நரேந்திர மோடிக்கு மகாத்மா காந்தி கூறிய தூய்மை இல்லாத இடத்தில் கடவுளும் இல்லை என்ற கோட்பாட்டின் வழி செயல்பட வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வத்தின் வெளிப்பாடே "தூய்மை இந்தியா" திட்டத்தை கொண்டு வந்தார். இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் உங்களை போன்ற மாணவ, மாணவிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்தியாவை உயர்த்த வேண்டும். படிக்கும் போது ஒழுக்க நிலைகளை கடைபிடித்து வாழ்வில் உயர வேண்டும் என்றார்.