மாமன் மகளையும், அத்தை மகளையும் தயவு செய்து திருமணம் செய்யாதிர்கள் என நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஓஎஸ்.மணியன் பேசியது பலரையும் முனுமுனுக்க வைத்தது.
சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனத்தின் சார்பாக, மத்திய அரசின் ராஷ்டிரிய வையோஸ்ரீ யோஜனா திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு 57 லட்சத்து, 65 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 476 பயணிகளுக்கு அமைச்சர் ஓஎஸ்.மணியன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன். "ஊனமாக குழந்தைகள் பிறப்பதற்கு முக்கிய காரணம் அத்தை மகளையும், மாமன் மகளையும் திருமணம் செய்து கொள்வதுதான் காரணம், இது அறிவியல் ரீதியாக நிரூபணம் ஆகியிருப்பதால், சொந்தத்தில் திருமணம் செய்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும் ஒருமுறை நாம் செய்யும் தவறு வாழ்நாள் முழுவதும் நமது குழந்தைகளை பாதிக்கும் என்றார் அவர்.