Skip to main content

எஸ்.ஆர்.எம்மில் 'கோவாக்சின்' தடுப்பு மருந்தின் 3-ஆம் கட்ட பரிசோதனை தொடக்கம்!

Published on 07/12/2020 | Edited on 07/12/2020
மந

 

 

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி உலகை அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்நோய் காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

 

இந்தியாவில் ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மத்திய அரசின் பாரத் பயோடெக் நிறுவனம், கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறிந்துள்ளது. பாரத் கோவாக்சின் என்கிற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த மருந்தை பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வைரலாஜி துறையின் ஒத்துழைப்புடன் கண்டுபிடிக்கப்பட்டு, இது விலங்குகளுக்கு பரிசோதனை முறையில் செலுத்தப்பட்டது. இந்த மருந்து நல்ல பலனைத் தருவதாக ஆய்வக முடிவுகள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து மனிதர்களிடம் இரண்டு கட்ட பிரசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை எஸ்.ஆர்.எம்மில் 'கோவாக்சின்' தடுப்பு மருந்தின் 3-ஆம் கட்ட பரிசோதனை  இன்று செய்யப்பட இருக்கிறது. இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்