Skip to main content

சி.சி.டி.வி.யில் பதிவாகமால் நகையை எடுத்துச் சென்ற நபர்..!

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

The person who took the jewelry without being recorded on CCTV ..!
                                                          மாதிரி படம் 


கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் (55 வயது) தமிழரசி. இவர், கடந்த நவம்பர் 21ஆம் தேதி, ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள தேசிய வங்கி ஒன்றில், தனது இரண்டரை பவுன் நகையை அடகு வைப்பதற்காக வரிசையில் காத்து நின்றபோது, நகையைத் தவிரவிட்டுள்ளார். 

 

அந்தப் பகுதியில் நீண்ட நேரம் தேடியும் அவரது நகை கிடைக்கவில்லை. இதையடுத்து, ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலையத்தில் தமிழரசி புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம் ஸ்ரீமுஷ்ணம் புதிய பேருந்து நிலையம் அருகே, காவல் ஆய்வாளர் வனிதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சேகர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

 

அப்போது அந்த வழியே வந்த ஒரு நபர், போலீசாரை கண்டதும் பயந்து ஓட முயன்றுள்ளார். போலீசார், அவரை மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில், கொல்லங்குறிச்சியைச் சேர்ந்த கதிர்வேலின் மகன் வீரப்பன் (50), தமிழரசி வங்கியில் தவறவிட்ட இரண்டரை பவுன் நகையை, யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு சென்றிக்கிறார் என்பது தெரியவந்தது. 


அந்த நகையை ஆண்டி மடத்தில் உள்ள ஒரு அடகுக் கடையில், 52 ரூபாய்க்கு அடமானம் வைத்து ஆடம்பரமாகச் செலவு செய்து வந்துள்ளார். இதை காவல்துறையினரிடம் வீரப்பன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் அடகு வைத்திருந்த நகையை போலீசார் மீட்டதோடு வீரப்பனையும் கைது செய்துள்ளனர். வங்கியில் தவறவிட்ட தமிழரசியின் நகையை எடுத்துச் சென்று அடகு வைத்த வீரப்பனின் செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பரபரப்பாக மக்கள் நடமாட்டம் உள்ள வங்கியில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. அப்படிப்பட்ட இடத்தில் தமிழரசி தவறவிட்ட நகையை வீரப்பன் கேமராவில் சிக்காமல் எப்படி எடுத்துக் கொண்டுபோனார் என்பது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்