விஜயதசமியையொட்டி இன்று கோவில்களில் குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடந்தன. நவராத்திாி விழாவின் 10-ம் நாளான இன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்ற கற்பித்தல் தொடங்கும் நாளாக கருதப்படுகிறது. நவராத்திாி விழாவின் நிறைவு நாளான இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
விஜயதசமியில் குழந்தைகளின் கல்வியை துவக்குவதே சிறந்தது என்பதற்காக எழுத்தாணிப்பால் எனப்படும் வித்யாரம்பம் குழந்தைகளுக்கு நாவில் தேன் தடவி தங்க ஊசியால் எழுதுவது ஐதீகம். இதில் பொிய தாம்பளத்தில் பச்சையாிசியால் குழந்தைகளின் கைவிரலை பிடித்து அகரத்தை தொடங்கி வைப்பார்கள் குருமார்கள்.
"கல்வி செல்வமே சிறந்தது" என்று போதிக்கும். இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வு பிரசித்த பெற்ற கோவில்களில் ஆண்டுத்தோறும் விஜயதசமி நாளன்று நடப்பது வழக்கம். அதன்படி இன்று கேரளா, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள பிரசித்த பெற்ற கோவில்களில் வித்யாரம்பம் நடந்தது. காலை 06.00 மணி முதலே பெற்றோா்கள் தங்களின் குழந்தைகளுடன் கேவில்களில் குவிந்தனா். பட்டு நோியல் மற்றும் புத்தாடை அணிந்து கொண்டு குழந்தைகள் கற்பித்தலை தொடங்கினார்கள்.