மதுரை மாநகராட்சி பூங்காவும், விளையாட்டு மைதானமும் பொன்மேனி – ஜீவனா ஸ்கூல் எதிரில் உள்ளது. அந்த இடத்தை மாநகராட்சி பெண் பணியாளர்கள் துடைப்பத்தால் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, அவர்களைப் பொருட்படுத்தாமல், அந்த நபர் செல்போனில் பேசியபடியே சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார்.
பெண் ஊழியர்கள் சத்தம்போட்டும், அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஒருவழியாக முடித்துவிட்டு சாவகாசமாகத் திரும்பிய அவர், அந்த ஊழியர்களை ஒருமையில் திட்ட ஆரம்பித்தார். “நான் 20 வருஷமா இங்க வந்துட்டு இருக்கேன். எப்பவும்போல இன்னைக்கும் போனேன். என்னைச் சத்தம் போடுற அளவுக்கு நீயெல்லாம் ஒரு ஆளா?” என்று உரத்த குரலில் மிரட்டினார்.
அந்த நபர் யாரென்று விசாரித்தோம். ஜீவனா ஸ்கூல் வேன் டிரைவராம். சொந்தமாக நான்கு வாகனங்கள் வைத்து ட்ரிப் அடிக்கிறாராம். கல் பெஞ்சில் உட்கார்ந்திருந்த அந்த நபரிடம், சட்டத்தின் பார்வையில் நீங்கள் நடந்துகொண்ட விதம் குற்றச்செயல்’ என்று அழுத்தமாகச் சொன்னோம். சுத்தத்தைப் பேணவேண்டிய இடத்தில் அசுத்தம் செய்பவர்கள் திருந்த வேண்டும்.