Skip to main content

பெரியாரின் 139வது பிறந்த நாள் மாலை அணிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்

Published on 15/09/2017 | Edited on 15/09/2017
பெரியாரின் 139வது பிறந்த நாள் மாலை அணிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 139வது பிறந்த நாளை முன்னிட்டு 17.9.2017 அன்று காலை 9.00 மணிக்கு அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் - செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் மற்றும் கழக முன்னணியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

எனவே கழக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, மகளிர் தொண்டர் அணி, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி ஆகிய அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சார்ந்த செய்திகள்