
திருச்சி சேம்பரம்பேட்டையில் 3 வீதிகள் சந்திக்கும் இடத்தில் பெரியார் கைத்தடியோடு நிற்பது போன்ற பிரமாண்ட சிலை உள்ளது. இந்த சிலையில் உள்ள பலகையில் தினமும் காலையில் பொன்மொழிகள் எழுதுவதற்காக செபாஸ்டின் என்கிற பொறுப்பாளர் வருவது வழக்கம். அதே போன்று இன்று காலை 4.00 மணி அளவில் பொன்மொழிகள் எழுதுவதற்காக அங்கு சென்ற போது பெரியாரின் கைத்தடி கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கட்சியின் பொறுப்பாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பிறகு கட்சி பொறுப்பாளர்கள் எல்லோரும் சேம்பரம்பரம் பேட்டை இன்ஸ்பெக்டர் இராமலிங்கத்திடம் பெரியார் கைத்தடியை உடைத்து சேதப்படுத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி புகார் கொடுக்க வெகு நேராமாக நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் யாரும் காவல்நிலையம் வரவில்லை என்கிறார்கள் திருச்சி பெரியார் கழக பொறுப்பாளர்கள்.

