திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அய்யனாபுரம் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் அரங்கராசன். இவர் திராவிடர் கழகத்தை சார்ந்த தீவிர பெரியார் தொண்டர். இவரது மனைவி அனந்தம்மாள் பெரியார் விருது பெற்றுள்ளார்.
இவர் மனச்சநல்லூர் பகுதியில் பேப்பர் ஏஜெண்ட் நடத்தி வந்தார். இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து இவருடைய இல்லத்தில் இரங்கல் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

அவர் ஏற்கனவே கண் தானம், உடல் தானம் செய்வதாக கூறியிருந்தார். அதன் அடிப்படையில் அவரது உறவினர்களின் ஒப்புதலோடு திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் அவரது கண்களை தானமாக பெற்று சென்றனர்.
பின்னர் அவரது உடல் இறுதி ஊர்வலமாக ஆற்றுப்பாலம் வரை எடுத்துச் செல்லப்பட்டு, பின்பு திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவ கல்லூரியில் மருத்துவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.