Skip to main content

எடப்பாடியை தேடி கொண்டிருக்கும் தூத்துக்குடி மக்கள்: வைகோ பேட்டி

Published on 25/05/2018 | Edited on 25/05/2018
vaiko



முதல்வர் எடப்பாடியை தூத்துக்குடி மக்கள் தேடி கொண்டிருக்கிறார்கள். முடிந்தால் முதல்வர் அங்கு போய் அவர்களை பார்க்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
 

சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த வைகோ, 
 

ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் என்று 1996ல் இருந்து நான் போராடி வருகிறேன். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் நான் 6 முறை கைது செய்யப்பட்டேன். நானே பொது மக்களாகவும், நானே வழக்கறிஞராகவும் ஸ்டெர்லைட்க்கு எதிராக போராடினேன். தற்போது ஸ்டெர்லைட்டின் பாதிப்பை உணர்ந்து மக்கள் தன்னெழுச்சியாக அறவழியில் போராடினார்கள்.
 

அவர்கள், கலெக்டர் அலுவலகம் நோக்கி வருவோம் என்று அறிவித்து விட்டுதான் வந்தனர். அப்படியிருக்கும் போது கலெக்டர் அங்கே இருந்திருக்க வேண்டும். ஆனால், கோவில்பட்டியில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். லட்சக்கணக்கான மக்கள் வரும் போது, மனுவை பெறுவதற்கு கலெக்டர் அங்கே இருக்க வேண்டும். ஆனால், அதை அவர் செய்யவில்லை. கலெக்டர் ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலியாக இருக்கிறார். ஸ்டெர்லைட் நிறுவனம் கொள்ளை லாபம் பெற மக்களை சுட்டு பொசுக்கியிருக்கிறார்கள். 
 

 துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி முதல்வர் பேசுகிறார். முதல்வருக்கு எதுவும் தெரியவில்லை. முதல்வர் எடப்பாடியை தூத்துக்குடி மக்கள் தேடி கொண்டிருக்கிறார்கள். முடிந்தால் முதல்வர் அங்கு போய் அவர்களை பார்க்க வேண்டும். இதற்கு பிறகும் ஸ்டெர்லைட் ஆலை இருக்க கூடாது. இருந்தால் அடித்து நொறுக்குவோம். நான் முதல் ஆளாய் இருப்பேன் என்றார். 
 

சார்ந்த செய்திகள்