தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக புதிய வழிகாட்டி நெறிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வாரத்தின் இறுதி நாட்களான ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் மக்கள் கூட்டம் என்பது குறைவாகவே காணப்பட்டது.
காய்கறி விலை நிலவரம் என்பது (1 கிலோ) கத்தரிக்காய் 50, தக்காளி 30, பீன்ஸ் 40, அவரை 50, முள்ளங்கி 20 , கேரட் 60, பல்லாரி 50, சின்ன வெங்காயம் 70, உருளை 50 என விற்கப்படுகிறது. திருச்சி பூ மார்க்கெட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதால் பூக்கள் வரத்து குறைந்துள்ளது.
பூக்கள் விலை என்பது செவந்தி 60, மல்லிகை பூ 1000, சம்மங்கி 20, ரோஸ் 60 என விற்கப்படுகிறது. மேலும் காந்தி மார்க்கெட் சாலையில் போக்குவரத்து காவலர்கள் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனர். காந்தி மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.