Skip to main content

கட்சி பொறுப்பாளர்களை குஷிப் படுத்தும் எம்.பி.

Published on 20/07/2018 | Edited on 20/07/2018
mp

 

கரூர் பாராளுமன்ற  உறுப்பினரும் துணை சபாநாயகருமான தம்பிதுரை கடந்த நான்கு ஆண்டுகாலமாக தொகுதி பக்கமும் சரிவர வருவதில்லை.  இந்த நிலையில் அடுத்த ஆண்டு 2019 ல் பாராளுமன்ற தேர்தல்  வர இருப்பதால் கட்சி பொறுப்பாளர்களை இப்பவே  சரி பண்ணி குஷி படுத்தி வருகிறார். 


          அதாவது இந்த  பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட  வேடசந்தூர் தொகுதியில் உள்ள வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை ஒன்றிய செயலாளர்களான சுப்பிரமணி, மலர்மண்ணன், லட்சுமணன் மற்றும் நகர செயலாளர்கள் பாலசுப்பிரமணி, மணி, பெருமாள், குமார்,   அறிவாழி உள்பட எட்டு பொறுப்பாளர்களும் இத் தொகுதி எம்.எல்.ஏ.வான டாக்டர்  பரமசிவம் தலைமையில்  டெல்லி  உள்பட சில இடங்களை  சுற்றிப்பார்க்க விமானத்தில் அழைத்து சென்றதின் பேரில் பொறுப்பாளர்களும் குஷியாக இருந்து  வருகிறார்கள். 

 

mp22

 

இப்படி கட்சி  பொறுப்பாளர்கள் விமானத்தில்  இருப்பது  போலவும் மற்ற இடங்களில்  நின்னு எடுத்துக் கொண்ட போட்டோக்கள் வாட்சப், பேஸ்புக் மூலம்  தொகுதியில் வளம் வந்து கொண்டு  இருப்பதை கண்டு கட்சிக் காரர்கள் சிலரிடம் கேட்டபோது... அது ஒன்னும் இல்லைங்க... எம்.பி. தேர்தல் வர இருப்பதால் கட்சி பொறுப்பாளர்களை குஷிப் படுத்தி தன் பக்கம்  எம்.பி. வைத்து கொள்ள முடிவு செய்து அந்த பொறுப்பை எங்க எம்.எல்.ஏ விடம்  ஒப்படைத்து இருக்கிறார். அதனால தான் அவர்களை எம்எல்ஏ   சுற்றுலா கூட்டி கிட்டு போய் சுற்றி காண்பித்து வருகிறார். இது போல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஐந்து தொகுதிகளில் இருக்க கூடிய கட்சி பொறுப்பாளர்களும் அந்தந்த  எம்.எல்.ஏ. தலைமையில் சுற்றுலா போல் டூர் போக  இருக்கிறார்கள் என்றனர்.
   
 

சார்ந்த செய்திகள்

Next Story

"மத்திய அமைச்சர் தெரிவித்துள்ள சூழலில் புதுச்சேரி அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்"- வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்! 

Published on 08/10/2022 | Edited on 08/10/2022

 

"Puducherry Government's position should be informed in the context of what the Union Minister has said"- Vaithilingam MP. Emphasis!

புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ள சூழலில் புதுச்சேரி அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். இப்பாடத்திட்டம் அமலானால், தமிழுக்கு முக்கியத்துவம் இருக்குமா என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல துறைகளைக் குழப்பிவிட்டு, தற்போது கல்வித்துறையையும் குழப்பத் தொடங்கியுள்ளனர். தமிழக பாடத்திட்டம் தமிழுக்கு முக்கியத்துவம் தருகிறது. மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளதன் மூலம் தமிழைப் புறக்கணிக்கும் சூழல் உருவாகும். முதலமைச்சர் ரங்கசாமி இவ்விஷயத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

 

மின்துறைத் தனியார் மயமாக்க டெண்டர் வெளியீட்டைத் தொடர்ந்து மின்துறையினர் போராட்டம் நடத்தினர். மின்துறையை 100 சதவீதம் தனியார் மயமாக்கும் முடிவு, இந்தியாவில் எம்மாநிலத்திலும் இல்லை. இதில் அரசின் நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். குறிப்பாக, மின்துறையின் ரூபாய் 2,000 கோடி மதிப்பிலான இடங்களை ரூபாய் 1- க்கு வாடகை தர முடிவு எடுத்துள்ளனர். அத்துடன் மின்துறை சாதனங்களைக் குறைந்த தொகைக்கு தனியார் பயன்படுத்த அனுமதிக்கவும் டெண்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

 

ஆளுநர், முதலமைச்சர், துறை அமைச்சர் அனுமதி இல்லாமல் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்காது. டெண்டர் யாருக்கு தரவேண்டும் என முடிவு எடுத்துதான் இந்த வழிகாட்டுதல்கள் டெண்டரில் இடம் பெற்றுள்ளன. ஏற்கெனவே, மதுபான தொழிற்சாலை அனுமதியைத் தொடர்ந்து, மின்துறை தனியார் மயமாக்கும் விஷயத்திலும் அரசு மற்றும் ஆளுநரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மின்துறை தனியார்மயம் தொடர்பான டெண்டரை வாபஸ் பெறாததன் மூலம் மின்துறையினரையும், மக்களையும் அரசு ஏமாற்றுகிறது"  என்று தெரிவித்தார்.


 

Next Story

"5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு"- ஆ.ராசா குற்றச்சாட்டு! 

Published on 03/08/2022 | Edited on 03/08/2022

 

"Irregularity in 5G spectrum auction"- A. Raza accused!

 

5ஜி ஏலம் தொடர்பாக, டெல்லியில் இன்று (03/08/2022) காலை செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வைச் சேர்ந்த நீலகிரி தொகுதியின் மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, "5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளது என்றிருக்கிறார்.

 

ரூபாய் 5 லட்சம் கோடிக்கு சென்றிருக்க வேண்டிய 5ஜி ஏலம் ரூபாய் 1.50 லட்சம் கோடிக்குத்தான் சென்றுள்ளது. எஞ்சிய பணம் எங்கே சென்றது என்று மத்திய அரசுதான் பதிலளிக்க வேண்டும். 5ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். 

 

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் குறித்து மாநில அரசுகளிடம் ஆலோசனை நடத்த வேண்டும். 2ஜி-யில் ஊழல் எனக் கூறியது பொய் என்பது அம்பலமாகியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். 

 

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் செய்ததாக சிஏஜி அறிக்கையின் அடிப்படையில், டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் சில மாதங்கள் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.