Skip to main content

ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக்கொலை - தூத்துக்குடி அருகே பரபரப்பு

Published on 22/08/2022 | Edited on 22/08/2022

 

passed away

 

தூத்துக்குடி, கோவில்பட்டியில் உள்ள திட்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பொன் ராஜ் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள திட்டங்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் பொன் ராஜ். 63 வயதுடைய இவர் தன் தோட்டத்தில் உள்ள தொழுவில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் தப்பி விட்ட நிலையில் அருகிலிருந்த மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.   கொலை தொடர்பாக கார்த்திக், வசந்த ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 1 கோடி பறிமுதல்; ஊராட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Rs. 1 crore confiscation; Case registered against panchayat chairman

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் மாவட்டம் எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா வீட்டில் ரூ.1 கோடி நேற்று (12.04.2024) தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி தொடர்பாக வருமான வரித்துறை விசாரித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடி யார் மூலம் வந்தது என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா அதிமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. 

Next Story

முறைகேடு புகார்; ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Complaint of malpractice Panchayat  president suspended

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் முறைகேடு புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாமரைப்பாக்கம் கிராமத்தின் ஊராட்சி மன்றத்தலைவராக கீதா துளசிராமன் என்பவர் பதவி வகித்து வந்துள்ளார். இந்த சூழலில் சட்ட விதிகளை மீறி கட்டட வரைபடத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக அரசுக்கு நிதி இழப்பீடு செய்ததாகவும், முறைகேடாக தீர்மானங்களை நிறைவேற்றி ஊராட்சிக்கு சேர வேண்டிய நிதிகளை கால தாமதமாக செலுத்தியதாகவும் இவர் மீது புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் இவர் மீதான முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் கீதா துளசிராமனை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.