கடந்த தோ்தலின்போது குமரி மாவட்டத்தில் பெரும்பான்மையான மீனவா்களின் ஓட்டு பொன் ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்தது. இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமியும், நரேந்திர மோடியும் மீனவா்களை குறி வைத்து அவா்களுக்காக கொண்டு வந்த மத்திய மாநில திட்டங்கள் பற்றி இருவரும் மாறி, மாறி பேசினார்கள்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, குமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இயற்கை பேரிடரின் போது கடலில் காணாமல் போகும் மீனவா்களையும் மேலும் தத்தளிக்கும் மீனவா்களையும் கண்டுபிடிக்கும் விதமாக கன்னியாகுமரியில் ஹெலிகாப்டா் தளம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள். இதற்கு பிரதமா் நடவடிக்க எடுக்க வேண்டும் என்றார்.
பின்னா் பேசிய மோடி, மீனவா்களுக்காக கொண்டு வந்த திட்டங்களை பற்றி பேசினாரே தவிர எடப்பாடியின் கோரிக்கையைப் பற்றி எதுவும் பேசவில்லை. இதனால் மேடையில் இருந்த எடப்பாடி மட்டுமல்ல பாஜகவினரே அப்செட் ஆகி விட்டனா்.