Published on 09/02/2019 | Edited on 09/02/2019
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகிலுள்ள கோட்டேரி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஓரிகாமி எனப்படும் காகித மடிப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு (ஓரிகாமி) காகித மடிப்பு மூலம் பல வகையான கலையை தமிழகம் முழுவதும் பயிற்சியாக கொடுத்து வரும் ஓரிகாமி தியாக சேகர் பயிற்சி அளித்தார்.
இயற்கை விவசாயி கோட்டேரி சிவக்குமார் மாணவர்களுக்கு இயற்கை முறை ( நஞ்சு அல்லாத) விவசாயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பயிற்சி அளித்தார்.
அடையாளம் அறக்கட்டளை தலைவர் மணிகண்டன் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பது சம்பந்தமாகவும், நீர் நிலைகளை மேம்படுத்துவது சம்பந்தமாகவும், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.
ஆசிரியர்கள் ஆர்வத்துடனும், குழந்தைகள் குதூகலத்துடனும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தெரிந்து கொண்டனர்.