Skip to main content

மோடிதான் பிரதமராக வேண்டும் என நாடே விரும்புகிறது-ஓபிஎஸ் பேச்சு

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

 

ops

 

காஞ்சிபுரம் கேளம்பாக்கத்தில் நடந்துவரும் அதிமுக பாஜக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டத்தில் துணைமுதல்வர் ஓபிஎஸ் பேசுகையில்,

 

திமுக காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் பெற்றது அதனால் அவர்கள் குடும்பம் மட்டும்தான் நன்மை பெற்றது. தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்ததா? அல்லது தமிழர்கள் பலனடைந்தார்களா? இதற்கு பதில் கூற வழியில்லாதவர்கள் இப்போது வாய் கூசாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதையும், காங்கிரஸுடன் இனி ஒட்டுமில்லை உறவுமில்லை என  கூறிவிட்டு காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு கொஞ்சுவதையும் மக்கள் மறந்துவிடுவார்களா?

 

மோடிதான் நமது நாட்டின் அடுத்த பிரதமராக ஆக வேண்டும் அதற்காகத்தான் நாம் இந்த வெற்றி கூட்டணியை அமைத்துள்ளோம். மோடிதான் பிரதமராக  வேண்டும் என நாடே விரும்புகிறது. ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன முடிவு எடுத்திருப்பாரோ அதே முடிவைத்தான் நாங்கள் எடுத்திருக்கிறோம். இந்த எழுச்சிமிகு கூட்டத்தைக் கண்டு எதிர்கட்சிகளின் அடிவயிறு கலங்கியிருக்கும்.

 

எதிர்கட்சிகளை பார்த்து கேட்கிறேன் உங்கள் கூட்டணியில் யார் பிரதமர்  வேட்பாளர் என சொல்ல முடியுமா? முடியாது உங்கள் கூட்டணியில் பிரதமர் ஆவதற்கு யாருக்குமே தகுதியில்லை, தைரியமும் இல்லை ஆனால் அதிமுக பாஜக கூட்டணி வெற்றிபெற்று மோடி பிரதமராவார் எனக்கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்