தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,
எந்த தேர்தலை அறிவித்தாலும் தேமுதிக சந்திக்க தயார். தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி அமைத்து போட்டியா, தனித்து போட்டியா என்பதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை கழகத்தில் ஆலோசித்து அறிவிப்பார். நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து சட்டமன்ற பொதுத்தேர்தலும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தேர்தலை சந்திக்க ஆளும் கட்சிக்கு பயம். ஆனால் அவர்கள் பயமில்லை என்கிறார்கள்.
18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர். ஆனால் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த 11 பேர் மீதும் கட்சி தாவல் சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கப்பட்டு அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். அப்படி செய்தால்தான் ஜனநாயக நாட்டில் நல்ல நீதியாக இருக்க முடியும். இவ்வாறு கூறினார்.