Published on 16/07/2022 | Edited on 16/07/2022

திருத்துறைப்பூண்டி அருகே அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் தலைமையில் 100- க்கும் மேற்பட்டோர் ஓ.பி.எஸ். அணிக்கு மாறினர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட மோதலையடுத்து, தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். இரு தரப்பிலும் முக்கிய நிர்வாகிகளை நீக்கி வரும் நிலையில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்காவுக்குட்பட்ட முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சிவ நாராயணசாமி தலைமையில் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து 100- க்கும் மேற்பட்டோர் விலகி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறினர்.