Skip to main content

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள இடங்களுக்கு எதிர்க்கட்சி ஏஜெண்டுகளுக்கு அனுமதி மறுப்பு!

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

கடந்த 18ஆம்  தேதி நடைபெற்ற பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனி கம்மவார் பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைத்து மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

nn

 

 

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்துள்ள இடத்தில் போலீசார் அல்லாமல் ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்த ஏஜெண்டுகள் காவலுக்கு இருப்பார்கள். ஆனால் இம்முறை கல்லூரி வளாகத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த ஏஜெண்டுகளை உள்ளே நுழைய அனுமதி மறுத்து வருகின்றனர்.

 

இது எதிர்க்கட்சியினர் இடையே பலத்த சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து டிடிவி தினகரன் கட்சியைச் சேர்ந்த கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில்..

 

இக்கல்லூரி நிர்வாகிகள் அதிமுகவுக்கு சாதகமாக இருந்துவருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளேன். ஆவண செய்வதாக கூறியுள்ளார் நீங்களும் பத்திரிக்கையாளர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் இருந்தாலும் இதுவரை நடந்த தேர்தலின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் பின்பற்றவில்லை. இது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்