
திமுக மாநில மகளிரணி புரவலர் நூர்ஜகான் பேகம் நேற்று இரவு மதுரையில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான திண்டுக்கல்லில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் இருக்கும் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நூர்ஜகான் பேகத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திமுக மாநில மகளிரணி தலைவி கனிமொழி சென்னையில் இருந்து திண்டுக்கல் வந்து அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி,

திமுகவில் மூத்த மகளிரணி தலைவி நூர்ஜகான் பேகம் பெண்களுக்கும் பாதுகாப்பாக இருந்தவர். கடுமையான போராளி சிறைசெல்ல கூட அஞ்சமாட்டார். எனக்கு கடுமையான சோதனை ஏற்பட்ட காலகட்டத்தில் ஒரு தாயைப் போல எனக்கு உதவியாக இருந்தவர். அவரது இழப்பு திமுகவிற்கு பேரிழப்பாகும் என்று கூறினார்.
இந்த பேட்டியின் போது திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.செந்தில்குமார் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட அளவில் உள்ள மகளிர் அணியினரும் உடன் இருந்தனர்.