Published on 03/11/2021 | Edited on 03/11/2021
சேலம் அம்மாபேட்டையில் கடந்த திங்கட்கிழமை (01.11.2021) அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்நாடு தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். அதேபோல், இந்தக் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தை தொடங்குவதற்கு முன்னதாக மூவேந்தர்களின் சின்னங்கள் பொறித்த கொடியை சீமான் ஏற்றினார். இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் இது தொடர்பாக அம்மாப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் ராஜா போலீசிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கணேசன், சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.