இனி நான் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை மேற்கொள்வேன் என மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஊராட்சிகள் தினம் இன்று நாடு முமுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாவட்டம் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் குமரி மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனனால் தத்தெடுக்கப்பட்ட முத்தலக்குறிச்சி ஊராட்சயில் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் வடநேரோ தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில்,
நான் தத்தெடுத்த இந்த கிராமத்தில் நடக்கும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. இந்த கிராமத்துக்கு எனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 லட்சம் செலவு செய்து இருக்கிறேன். குமரி மாவட்டத்தில் மருத்துவ சேவை என்பது மிக சிறப்பாக உள்ளது. கடந்த ஆண்டு 21 ஆயிரம் தாய்மார்களுக்கு நடந்த பிரசவத்தில் 8 பெண்கள் மட்டும் தான் இறந்திருக்கிறார்கள். இதே போல் தொற்று நோய்கள் 90சதவிதம் கட்டுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் நடமாடும் நோய் தடுப்பு மருந்து துறை மூலம் குமரி மாவட்டத்தில் 200 பெண்களுக்கு மார்பக புற்று நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் 65 சதவிதம் பிரசவம் அரசு மருத்துவமனைகளில் நடக்கிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் 10 சதவிகிதமாக இருந்த பிரசவம் தற்போது 35 சதவிகிதமாக அதிகாரித்துள்ளது. இதை 100 சதவிகிதமாக மாற்ற அரசு மருத்துவா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இனி நானும் அரசு மருத்துவமனைகளில் தான் சிகிட்சைக்காக செல்வேன் என்றார்.
பிறகு அவர் தொடா்ந்து சிறப்பு கிராம சபை கூட்டத்தையொட்டி மத்திய பிரதேசத்தில் இருந்து மதியம் 1மணிக்கு பிரதமா் மோடி சிறப்புரையாற்றிய நிகழ்ச்சியை தொலைகாட்சியில் நேரடியாக மக்களோடு மக்களாக உட்கார்ந்து பார்வையிட்டார். இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.