Published on 31/10/2018 | Edited on 31/10/2018

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீட்டுக்கு செய்வதில்லை 20 வது தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க போவதாக அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி.தினகரன்,
20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால் மண் குதிரை யாரென்று மக்கள் நிரூபிப்பார்கள். தேர்தலை சந்திக்க ஏற்கனவே பொறுப்பாளர்கள் எல்லாம் நியமிக்கப்பட்டுவிட்டனர். மேல்முறையீடு இல்லை இடைத்தேர்தலை சந்திக்க தயார். 18 தொகுதியிகளும் நாங்கள் வெற்றி பெறுவோம். பட்டாசு தொழிலாளர்கள் வளர்ச்சிக்காக இந்த அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினார்.