மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் சாட்சிகள் விசாரிக்க இருந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இன்று நிர்மலா தேவி ஆஜராகவில்லை.
இன்று, முதல் சாட்சியான தேவாங்கர் கல்லூரியின் தாளாளர் ராமசாமி ஆஜராகியுள்ளார். முருகன், கருப்புசாமி இருவரும் ஆஜராகியிருந்த நிலையில் நிர்மலாதேவி தொடர்ச்சியாக இந்த முறையும் ஆஜராகாததால் கட்டாயமாக ஆஜராக வேண்டும் என நீதிபதி கூறினார். மேலும் நிர்மலா தேவிக்கான ஜாமீனை ரத்து செய்து, நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதி கூறினார்.
இதுகுறித்து நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறுகையில், அவர் நிர்மலாதேசிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் நேற்று என்னிடம் பேசினார். தன்னை தொடர்ச்சியாக மிரட்டுகிறார்கள். தனக்கு மன நலம் பாதிப்பதாக உள்ளது, என்னால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை, எனவே என்னை மருத்துவமனையில் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்று அவர் திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். ஆனால் தற்போது அவர் கட்டாயம் ஆஜராகும்படி சொன்னதால், வழக்கறிஞர்கள் அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளோம் என்றார்.