Published on 26/02/2019 | Edited on 26/02/2019
நீலகிரி மலை இரயில் சேவைக்கு அதிநவீன ஸ்டீல் இரயில் பெட்டிகளை, சென்னை இரயில் பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலையான ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் இருந்து முதல்முறையாகத் தயாரிக்கப்பட்டு, சேலம் கோட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் இருந்து நீலகிரி மலை இரயில் சேவைக்கு மொத்தம் 15 இரயில் பெட்டிகளை தயாரிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதில் தற்போது முதற்கட்டமாக 4 இரயில் பெட்டிகளை தயாரித்து சேலம் கோட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் புதிய இரயில் பெட்டிகள் சேலத்திலிருந்து ரயில்பாதை வழியாக மேட்டுப்பாளையம் சென்றடைந்து நீலகிரி மலை ரயில் சேவையில் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள நீலகிரி மலை ரயில் பெட்டிகள் சுமார் 40 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.