
நீட் தேர்வில் ஓ.எம்.ஆர் விடைத்தாள் முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வில், இணையதளத்தில் வெளியான ஓ.எம்.ஆர் விடைத்தாளில் தனது மதிப்பெண் மாற்றப்பட்டுள்ளதாக மனோஜ் என்ற மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், சைபர் கிரைம் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளைக் கொண்ட குழு இதுகுறித்து யார் மீதும் வழக்குப் பதிவுசெய்யாமல் ஆரம்பகட்ட விசாரணையை மட்டும் நடத்த வேண்டும் எனக் கூறி சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரித்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அறிக்கையைப் பொறுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்ய உத்தரவிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.