Skip to main content

“புத்தருக்குக் கிடைத்தது போன்ற ஞானத்தையும் பெறமுடியும்!”- வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அறிவுரை!

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

வழக்கறிஞர் தொழிலில் ஆரம்பத்தில் வெற்றி கிடைக்காவிட்டாலும் அதிருப்தி அடைய வேண்டாம் என இளம் வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அறிவுரை வழங்கியுள்ளார்.
 

இந்திய அரசியல் சாசனம் 1949- ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950- ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினம், அரசியல் சாசன தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

the constitution of india day high court judge speech


சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசியல் சாசன தினம் மற்றும்   வழக்கறிஞர்கள் பதிவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 865 சட்ட  பட்டதாரிகள்  வழக்கறிஞர்களாகப் பதிவு செய்து,  உறுதிமொழி  எடுத்துக் கொண்டனர். இதேபோல, அரசியல் சாசன தின உறுதிமொழியை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி படிக்க சக நீதிபதிகளும், பார் கவுன்சில் நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

the constitution of india day high court judge speech


இந்நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பேசுகையில், ‘‘இந்த மாநிலம் அறிவுசார் மக்களின் முனையமாக உள்ளது. சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்யும் அரசியல் சாசனம் அனைத்து சட்டங்களுக்கும் தாயாக உள்ளது. அரசியல்சாசனம் பகவத் கீதையைப் போன்றது. அது உங்களுக்கு பல விசயங்களைக் கற்றுத்தரும். மூத்தோர்களின் வழியைப் பின்பற்றுங்கள். உலகிலேயே மிகப்பெரிய அரசியல் சாசனம் நம்முடையதுதான். நல்ல விசயங்களைச் செய்வதற்கு நல்ல பாதையைத் தேர்ந்தெடுங்கள். வழக்கறிஞர் தொழில் ஆரம்பத்தில் போராட்டங்கள் நிறைந்ததாகவும், அதிருப்தி நிறைந்ததாகவும்தான் இருக்கும். நல்ல குணாதிசயங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். ஆழ்ந்த சட்ட அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். சிறந்த முறையில் பணியாற்றினால் உண்மையான திருப்தி கிடைப்பதுடன் புத்தருக்கு கிடைத்தது  போன்ற ஞானத்தையும் கூடுதலாகப் பெறமுடியும். சுயநலத்தை விட்டொழியுங்கள். ஒட்டுமொத்த அமைப்பும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இயங்குகிறது. அந்த நம்பிக்கையை நீங்கள் பெற்றெடுக்க வேண்டும். ஆரம்பத்தில் வெற்றி இல்லாவிட்டாலும்  அதிருப்தி அடையாதீர்கள்’ என்றார்.

the constitution of india day high court judge speech


நீதிபதி என்.கிருபாகரன் பேசுகையில்,"சமீபகாலங்களில் தமிழகத்தில் உரிமைகள் கொண்டாடப்பட்டு கடமைகள் மறக்கப்பட்டு வருகின்றன. போராட்டங்களில் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். பணிபுரிவதில் ஆர்வம் காட்டுவதில்லை. சமூகத்தில் எதிர்வினை உருவாகும்போது வழக்கறிஞர்களின் பங்கு அங்கு முக்கியமாகிறது. உங்களது சட்ட அறிவு என்பது பொதுநலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையல்ல. சாதி, மத சக்திகளுக்கு இறையாகிவிடக் கூடாது. போக்குவரத்து விதிகளை மதியுங்கள். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சிலர் தங்களை தற்காத்துக்கொள்ளவே சட்டப் பட்டம் பெறுகின்றனர். அதுபோன்ற சூழல் இனி உருவாகக்கூடாது", என்றார்.
 

the constitution of india day high court judge speech

 

நீதிபதி பி.என்.பிரகாஷ் பேசுகையில், மக்கள் வழக்கறிஞர்கள் என்றாலே அதிருப்தியில் உள்ளனர். வழக்குகளை எப்படி வாதிடலாம் எனக்கூறும் அளவுக்கு சென்று விட்டது. திறமையான வழக்கறிஞர்களாக நீங்கள் செயல்பட வேண்டும், என்றார். நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசுகையில்,  “சட்டத்தின் ஆட்சி முடிந்து விட்டால் கலகம் உருவாகிவிடும். நல்ல குணாதிசயங்களை வளர்த்து அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.”  என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.