Skip to main content

நீட் ஆள்மாறாட்டம்...  இர்ஃபானின் தந்தை மருத்துவரே இல்லை-சிபிசிஐடி தகவல்  

Published on 02/10/2019 | Edited on 02/10/2019

 நீட் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட இர்ஃபானின் தந்தை போலி மருத்துவர் என தெரியவந்துள்ளது.  

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சேர்ந்த இர்ஃபான் என்ற மாணவரும் மருத்துவம் படிக்க வைக்க நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக கூறி அவரது தந்தை டாக்டர் முஹம்மத் ஷஃபியை சிபிசிஐடி போலீசார் செப்டம்பர் 29 ஆம் தேதி கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.  
 

pp

 

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் மாணவராக சேர்ந்த  இர்ஃபானை  போலீசார் தேடிவந்த நிலையில் மாணவன் இர்ஃபான் சேலம் நடுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சிவா முன்னிலையில் நேற்று ஆஜரானர். ஆஜரான மாணவன் இர்ஃபானை அக்டோபர் 9 ஆம் தேதிவரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட இர்ஃபான் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி இருந்து நீக்கப்பட்டுள்ளார். மருத்துவக் கல்லூரி இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.   

இந்நிலையில் இர்ஃபானின் தந்தை முகமது ஷபி  போலி மருத்துவர் என்பதும், வாணியம்பாடி பகுதியில்  போலியாக இரண்டு கிளீனிக்களை நடத்தி வந்ததாகவும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்