Skip to main content

தேநீர் விற்றதாக மோடி கூறிவருவது பொய்! மோடி உண்மையிலேயே பிற்படுத்தப்பட்டவரா? கி.வீரமணி கேள்வி

Published on 07/04/2018 | Edited on 07/04/2018
narandra modi 600.jpg




பிரதமர் நரேந்திர மோடி தன்னைப் பிற்படுத்தப்பட்டவர் என்றும், பி.ஜே.பி. தேசிய தலைவர் அமித்ஷா இட ஒதுக்கீட்டை தாம் ஆதரிப்பதாகவும் கூறியுள்ளனரே - இவை உண்மைக்கு மாறானவை - சந்தர்ப்பவாதத்தன்மை கொண்டவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். மேலும், ஒரு காலத்தில் தான் தேநீர் விற்றதாக மோடி கூறிவருவதும் பொய்.  அவரது உறவினர் நடத்திய உணவகத்தில் பொழுதுபோக்காக சில காலம் வேலை பார்த்ததையே அவர் அப்படி திரித்துக் கூறுகிறார் என்று சக்தி சிங் கூறினார் என தெரிவித்துள்ளார். 
 

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

பி.ஜே.பி. தொடங்கப்பட்ட 38 ஆம் ஆண்டு நாளையொட்டி டில்லியில் கட்சித் தலைவர்களிடையே பேசும்போது பிரதமர் மோடி தன்மீது பரிதாப உணர்வு ஏற்படும் வகையில் பேசியிருக்கிறார். நான் ஏழைத் தாய்க்குப் பிறந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால், எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று பேசியிருக்கிறார்.
 

இவர் பிற்படுத்தப்பட்டவரா?
 

இது தொடர்பாக காங்கிரசு கட்சியின் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோஹில் கூறியுள்ள கருத்து முக்கியமானது (9.5.2014).

மோத் கஞ்சிஸ் என்ற உயர்ஜாதி வகுப்பில் பிறந்த நரேந்திர மோடி 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் குஜராத் மாநில முதல்வராகப்பதவியேற்றார்.
 

அதன்பிறகு 3 மாதங்கள் கழித்து தனது ஜாதியை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இணைத்துக் கொண்டார். இதனால் உண்மையான பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே, அந்த வகுப்பினரிடம் மோடி மன்னிப்புக் கேட்கவேண்டும். காங்கிரசு ஆட்சிக் காலத்தில் மோத் கன்சீஸ் என்ற ஜாதிப்பிரிவு உள்ளிட்ட 40 ஜாதிப் பட்டியலை பிற்படுத்தப்பட்ட பிரிவில் இணைத்தது. இதில் எதுவுமே மோடியின் ஜாதி அல்ல; மோடி மோத் கன்சாஸ் என்ற உயர்ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர். பெயர் ஒற்றுமை காரணமாக தனது ஜாதிப் பிரிவையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கு ரகசியமாக சேர்த்து அரசாணையை வெளியிட்டார். இந்த மாற்றம் அவரது அமைச்சரவையில் இருந்த சிலருக்கு மட்டுமே தெரிந்ததாகும். ஊடகத்திலும் இந்த அரசாணை குறித்து எந்த ஒரு தகவலும் கூறாமல் மறைத்து விட்டனர்.  
 

தேநீர் விற்றாரா?
 

தேநீர் விற்றதாகக் கூறுவதும் உண்மையா என்பது கேள்விக்குறியே! ஒரு காலத்தில் தான் தேநீர் விற்றதாக மோடி கூறிவருவதும் பொய்.  அவரது உறவினர் நடத்திய உணவகத்தில் பொழுதுபோக்காக சில காலம் வேலை பார்த்ததையே அவர் அப்படி திரித்துக் கூறுகிறார் என்று சக்தி சிங் கூறினார்.
 

Gohil flaunted a Gujarat government resolution dated January 1,2002 that he had procured through the Right To Information Act (RTI) to show how Modi usurped the rights of Other Backward Castes (OBCs) by placing his rich “Modh Ghanchi” caste in the OBC category within four months of becoming chief minister. 

Asked why he was making the disclosure so late in the day when Modi has been flaunting his OBC credentials all these months, Gohil said he was supplied the government resolution only two days ago, after the second RTI appeal, and he could make it to Delhi to share it with the media only after polling was over on Wednesday in the Abdasa Assembly by-election, which he was contesting in Gujarat.

He explained the “Modh Ghanchis” are not of “Teli” caste like the Muslim Ghanchis of Gujarat who enjoy OBC status. They are “Vaishyas”. He also quoted from the authentic Gujarati lexicon ‘Bhagvadgomandal’, which says the Modh are rich people living in a particular village. Gandhiji was a “modh vanik”, he said. 

உண்மை இவ்வாறு இருக்க இப்பொழுது எதற்காக தன்னைப் பிற்படுத்தப்பட்டவர் என்று பிரதமர் மோடி முன்னிலைப்படுத்துகிறார்? வட மாநிலங்களில் பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உ.பி. சாமியார் ஆட்சியில் அன்றாடம் தாழ்த்தப்பட்டவர்கள்மீது வன்முறைகள் சர்வ சாதாரணமாகி விட்டன.

 

narandra modi 600.jpg


 

தாழ்த்தப்பட்டவர்களைப் பாதுகாக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. வட மாநிலங்களில் கலவரம் வெடித்துவிட்டன; 13 தாழ்த்தப்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் பி.ஜே.பி.மீது கடும் எதிர்ப்பு தாழ்த்தப்பட்டோர் மத்தியில் கிளம்பியுள்ளதால், இப்படிப் புலம்ப ஆரம்பித்துள்ளார் பிரதமர் மோடி.
 

(வரும் 16 ஆம் தேதி அன்று சென்னையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ததற்காக அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்).

அமித்ஷா - இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாளரா?
 

இரண்டாவதாக பி.ஜே.பி.யின் தேசிய தலைவர் அமித்ஷா இட ஒதுக்கீடு குறித்துத் தெரிவித்துள்ள கருத்தும்கூட சந்தர்ப்பவாதமே!

பா.ஜ.க.வின் 38 ஆவது ஆண்டு நாளை முன்னிட்டு மும்பையில் நேற்று (6.4.2018) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:
 

வரும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாங்கள் செய்த பணிகளைச் சொல்லித்தான் வாக்குக் கேட்போம். வெற்று வாக்குறுதிகள் அளிக்கமாட்டோம். எஸ்.சி., எஸ்.டி., சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் தகர்த்து வருவதாகக் காங்கிரசு தலைவர் ராகுல் காந்தியும், மற்றவர்களும் கூறி வருகின்றனர். இட ஒதுக்கீடு கொள்கையை பா.ஜ.க. ஒருபோதும் கைவிடாது. நீங்கள் கைவிட முயன்றாலும், பா.ஜ.க. ஒருபோதும் அதை அனுமதிக்காது. (பிடிஅய்)
இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
 

இது உண்மைதானா? இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் பி.ஜே.பி.யின் செயல்பாடுகள் என்ன? நீட்டை எதிர்த்துக் கடுமையாகப் போராடினாலும், அதனை அமல்படுத்துவதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள் என்பதை நாடறியும்.
 

கடந்த 3 ஆம் தேதி டில்லியில் ஆர்ப்பாட்டம் - கருத்தரங்கம்
 

கடந்த 3 ஆம் தேதிகூட டில்லியிலே நீட் தேர்வை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தின்முன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். நாடாளுமன்றத்தின் எதிரே உள்ள கான்ஸ்டிடியூசன் கிளப்பில் பல்வேறு கட்சித் தலைவர்கள், சமூகநீதியாளர்கள், மாணவர்கள் எல்லாம் பங்குகொண்டு நீட் தேர்வை எதிர்த்துக் கருத்தரங்கம் நடத்தினோமே - இவையெல்லாம் காதில் விழவில்லையா - காவி கட்சிக்காரர்களுக்கு!
 

இன்றைக்கு இட ஒதுக்கீட்டுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் இந்த அமித்ஷா யார்?
 

6.8.2015 அன்று மதுரையில் திருவாளர் எஸ்.குருமூர்த்தி அய்யரின் (இன்றைய துக்ளக் ஆசிரியர்) பின்னணியில் தேவேந்திரர் தன்னார்வு அமைப்பு என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
 

அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களை, நாங்கள் தேவேந்திரனை தெய்வமாக வணங்கும் உயர்ந்த சமூகம் - எங்களுக்கு இட ஒதுக்கீடு தந்து இழிவுபடுத்தவேண்டாம் என்று கூற வைத்தார்கள்.
 

அந்தக் கூட்டத்தில் அமித்ஷா என்ன பேசினார்?
 

அந்தக் கூட்டத்திலே சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட பி.ஜே.பி. தேசிய தலைவர் அமித்ஷா கூறியதுதான் முக்கியமானது.

உங்கள் சமூகம் எவ்வளவு உயர்ந்தது என்று மத்தியப் பிரதேசத்தில் ஒரு மாநாட்டில் ஒரு மாணவன் சமர்ப்பித்த கட்டுரை மூலம் தெரிந்து கொண்டேன். அதில் தென்னிந்தியாவில் தாழ்த்தப்பட்ட சமுதாயம் ஒன்று பசுவை வணங்கி, தேவேந்திரனை வழிபடுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்து உங்கள் சமுதாயத்தின்மீது மரியாதை ஏற்பட்டது. இந்தியாவிலேயே அனைத்து ஜாதிகளும் எங்களை பி.சி. பட்டியலில் சேருங்கள் என்று லாபத்தை எதிர்பார்த்து கேட்கும்போது, எங்களுக்கு இட ஒதுக்கீடே வேண்டாமென்று கூறும் ஒரு சமுதாயத்தை இங்குதான் பார்க்கிறேன். உங்களுக்காக பிரதமரிடம் பேசி நான் உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வைப்பேன் என்று சொன்னாரா - இல்லையா? உண்மையிலேயே இட ஒதுக்கீட்டின்மீது இவருக்கு அக்கறை இருந்தால் என்ன சொல்லியிருக்கவேண்டும்?

 

Veeramani


 

நீங்கள் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டவர்கள், கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், கல்விதான் உங்களை உயர்த்தும் - நீங்கள் உங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றல்லவா கூறியிருக்கவேண்டும். மாறாக அவர்களை உற்சாகப்படுத்துவது எதைக் காட்டுகிறது?
 

கோவில்களில் ஆட்டை வெட்டுவதற்குமுன்பு அதன் கழுத்தில் மாலை போடுவார்களே, அதுதானே இது!

மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்தியதற்காக வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள், சந்தர்ப்பவாதம் பேசுகிறார்கள்.

பிற்படுத்தப்பட்டவர்கள் 27 சதவிகித ஆணை மத்திய அரசு அலுவலகங்களில் எத்தனை விழுக்காடு? 14 சதவிகிதம்தானே!  எஞ்சியதை உயர்ஜாதியினரே ஏப்பம் விடும் நிலை. எனவே, இவரது கபட நாடக வசனத்தைக் கண்டு ஏமாறாமல், ஒடுக்கப்பட்டவர்கள் புரிந்துகொள்ளட்டும். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால், கஜக் குட்டிக்கரணம் போடுகிறார்கள், எச்சரிக்கை! எச்சரிக்கை!!

இவ்வாறு கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்