நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக். 21 தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை அக்.24 தேதி நடைபெறும் என்றும், செப்டம்பர் 23 தேதி முதல் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 299 வாக்கு சாவடிகள் அமைக்கப்படும் என நெல்லை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ், இடைத்தேர்தலுக்காக அமைக்கப்படும் 299 வாக்கு சாவடிகளில் 36 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. நாங்குநேரி தொகுதியில் மட்டும் 2.56,414 வாக்காளர்கள் உள்ளனர் எனக்கூறியுள்ளார்.
அதேபோல் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியம், விக்கிரவாண்டி தொகுதில் 24 வாக்கு சாவடிகள் பதற்றமானவை, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர். மொத்தமாக 9 பறக்கும் படை பணியில் இருக்கும். பொதுக்கூட்டங்களை கண்காணிக்க வீடியோ கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு இயந்திரங்கள் தயாராக உள்ளது. அதேபோல் 1,333 அரசு அலுவலர்கள் தேர்தல் பணிக்கு தயாராக உள்ளனர். பணப்பட்டுவாடாவை தடுக்க 39 பறக்கும் படை குழு அமைக்கப்படும் எனக்கூறினார்.