Skip to main content

நக்கீரன் இணையதள செய்தி எதிரொலி; நாகச்சேரி குளத்தில் பிளாஷ்டிக் கழிவுகள் அகற்றம்

Published on 22/06/2019 | Edited on 22/06/2019

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தில் நாச்சேரிகுளம், ஓமக்குளம், இளமையாக்கினார்குளம் உள்ளிட்ட 9 குளங்கள் உள்ளது. இந்த குளங்களில் கோடை வெய்யிலின் தாக்கத்தால் தண்ணீர் வற்றி காய்ந்து  உள்ளது. இதில் நாகச்சேரி குளம் பெரிய குளமாகும். இந்த குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் உள்ளது.

p

பிளாஸ்டிக் கழிவுகளால் குளத்தில் நிற்கும் தண்ணீர் பூமிக்கு அடியில் செல்லாது. குளம் வற்றியுள்ள இந்த நேரத்தில் பிளாஷ்டிக் கழிவுகளை எடுக்க அரசு முயற்சி எடுப்பது இப்போது நடக்காது. எனவே  தன்னார்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் முன் வரவேண்டும் என்று கடந்த 17-ந்தேதி இரவு நக்கீரன் இணயதளம் படத்துடன் செய்தியை பதிவு செய்தது. 

 

p

 

இந்த செய்தியை சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இது சிதம்பரம் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் சமூக வலைதளத்தில் வைரலாகியது. இதனைதொடர்ந்து சனிக்கிழமையென்று சிதம்பரம் நகரத்தில் உள்ள டைமிங் கெல்ப் என்ற அமைப்பின் தலைவர் வினோத் தலைமையில் தன்னார்வலர்கள், பள்ளி மாணவர்கள், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து நாகச்சேரி குளத்தில் இருந்த 200 கிலோவுக்கு மேலுள்ள  பிளாஷ்டிக் கழிவுகளை அப்புறபடுத்தினர். ஞாயிற்று கிழமையும் இந்த பணிகள் தொடரும் என்று கூறியுள்ளனர். இவர்களின் செயலை பொதுமக்கள் வரவேற்று வாழ்த்து கூறி வருகிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்