நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தற்போது அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை துவக்கியிருக்கின்றன. இந்நிலையில்.

நாங்குநேரியில் நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக விழாவில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பண அரசியலுக்கு எதிராக கட்டாயம் மாற்றம் வரும் அதை உணர்ந்து மக்கள் தாங்களாகவே புரட்சி செய்வார்கள். யாரால் தேர்தல் வருகிறதோ அவரிடமிருந்து தேர்தலுக்கான தொகையை தேர்தல் ஆணையம் பெறவேண்டும். ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை மீட்காத திமுக ஆட்சியில் இல்லாதபோது எப்படி மீட்கும் என்று கேள்வி எழுப்பினார்.

அதேபோல் மக்களுக்கான தலைவனை திரையில் தேடக்கூடாது என்று கூறிய அவர் மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும் திரையில் தேடக்கூடாது. நான் அமைப்பு சரி இல்லை என்கிறேன் சிலர் சிஸ்டம் சரி இல்லை என்கிறார்கள் என்றார்.