Published on 03/02/2021 | Edited on 03/02/2021
![Mysterious person who stole a two-wheeler - Police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/D-nkBOgTb4r8eryMk1oEsnT1BTZ1JUMaplGvLQFi1lk/1612333250/sites/default/files/inline-images/theif_1.jpg)
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஜய். இவர் வழக்கம்போல் தனது இரு சக்கர வாகனத்தை இன்று (03.02.2021) வீட்டின் முன் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியே வந்த மர்ம நபர் ஒருவர், சிறிது நேரம் அங்கும் இங்கும் நோட்டமிட்டு, திடீரென தனது கையில் வைத்திருந்த சாவியைக் கொண்டு இரு சக்கர வாகனத்தின் லாக்கை திறந்துள்ளார். திறந்தவுடன் மீண்டும் சாலையில் ஆள் நடமாட்டத்தைப் பார்த்த பின்பு, மெதுவாக இரு சக்கர வாகனத்தை சிறிது தூரத்திற்குத் தள்ளி சென்றுள்ளார்.
இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதையடுத்து, அஜய் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.