திருச்சியில் பாடி மாடிஃபிகேஷன் என்ற பெயரில் நூதன முறையில் ஆபரேஷன்களை செய்து வந்த டாட்டூ ஆர்ட்டிஸ்ட்டை தாமாக முன்வந்து போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டாட்டூ சென்டர் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பாடி மாடிஃபிகேஷன் என்ற பெயரில் நூதனமான முறையில் நாக்கை இரண்டாக கிழித்து நாக்கிற்கு வண்ணம் திட்டுவது, கண்களுக்குள் வண்ணம் தீட்டுவது போன்ற ஆபரேஷன்களை செய்து சமூக வலைத்தளங்களில் அது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.
முன்னதாக தன்னை இதுபோன்ற மாற்றங்களுக்கு உட்படுத்திக் கொண்ட அந்த இளைஞர் தன்னுடைய வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, நீங்களும் இதுபோல செய்து கொள்ள வேண்டும் என்றால் என்னைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து பலரும் அவரிடம் நாக்கை இரண்டாக கிழித்து வண்ணம் திட்டிக் கொள்ளும் ஆபரேஷன் செய்து கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் குவிந்தது. மருத்துவக் கட்டுப்பாடுகளை மீறி இதுபோன்ற நூதனமான மற்றும் ஆபத்தான அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர். இது இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வழி காட்டுகிறது என்ற புகார் அடிப்படையில் ஹரிஹரன் மற்றும் ஜெயராமன் ஆகிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஹரிகரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டாட்டூவை கையில் போடுவதற்கு ரூபாய் மூன்று லட்சம் வரை வாங்கப்பட்டுள்ளது. அதேபோல் சாதாரணமான டாட்டூ போடுவதற்கும் உயர்ரக டாட்டூ போடுவதற்கும் என 3 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வசூல் செய்திருப்பது தெரியவந்துள்ளது. மூன்று பேரின் நாக்கை சிதைவு படுத்தி டாட்டூ போடும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரிந்துள்ளது. அவருடைய நண்பர்களையே இதுபோன்று செய்ய வைத்து அது தொடர்பாக விடியோவை இன்ஸ்டா பக்கத்தில் ப்ரமோவிற்காக இவர் பயன்படுத்தியுள்ளது விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது. நாக்கை சிதைவு படுத்தி போடப்படும் டாட்டூவிற்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் விலை நிர்ணயித்ததும் தெரியவந்துள்ளது.