
மத்திய பாஜக அரசு வக்பு வாரிய சட்ட திருத்தத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளதாகவும், இந்த சட்ட திருத்தம், இஸ்லாமியர்களிடம் இருந்து வக்புவாரிய சொத்துகளை அபகரிப்பதற்கான சட்டத் திருத்தங்கள் எனவும், மேலும் இந்த சட்ட திருத்தம் வக்பு வாரிய அதிகாரங்களை குறைக்கப்படுவதற்கான சட்டத்திருத்தம் என இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள ஜமாத் அமைப்புகள் மூலம் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இன்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் வக்பு வாரிய சட்ட திருத்ததிற்கு எதிராக கருப்பு பட்டை அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய நாடுகளுக்கு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அரசு பயணம் மேற்கொள்ளும் போது அங்கே அவர் இஸ்லாமிய பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகளை கட்டித் தழுவுகிறார். ஆனால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை பார்த்தால் வெறுப்பை காட்டுகிறார். ஆகையால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களும் வியாபாரிகளாக மாற வேண்டும். அப்போதுதான் இந்தியா பிரதமர் இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு அன்பை காட்டுவார் என்று இஸ்லாமியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.