
சமூக செயற்பாட்டாளர் முகிலன் கூடன்குளம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்து கொண்டதால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஸ்டெர்லைட் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் பாளை சிறையிலிருந்த முகிலனை அதிகாலையில் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டு கொசு உற்பத்தியாகும் தனி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் சிறையில் இருந்தபோது அதே சிறைக்கு வரும் போராளிகளுக்கு உற்சாக வகுப்புகளையும் நடத்தினார். அதனால் அவர் மீது மேலும் பல வழக்குகளில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது கூடன்குளம் வழக்குகளில் முதலில் பிணை பெற்ற பிறகு கரூர் நீதிமன்றத்தல் உள்ள வழக்குகளிலும் பிணை பெற்றார்.
இந்த நிலையல் இன்று மதியம் மதுரை சிறையிலிருந்து வெளியே வந்த முகிலனை சமூக ஆரவளர்கள் முழக்கிட்டு வரவேற்றனர்.
என் பணி தொடரும் என்றார் முகிலன்.