Skip to main content

மகனின் கழுத்தில் கால் வைத்து அழுத்தி கொலை செய்த தாய்!!

Published on 21/06/2021 | Edited on 21/06/2021
The mother who put her foot on her son's neck..passed

 

திருவண்ணாமலை மாவட்டம் வேலூர் வட்டம் கே.வி.குப்பத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி திலகவதி. இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார். திலகவதி தனது மகனுடன் அரியூரில் உள்ள தனது சகோதரிகள் பாக்கியலட்சுமி, கவிதாவுடன் இருந்துள்ளார். 

 

ஜூன் 20ஆம் தேதி, மகனுக்குப் பேய் பிடித்துள்ளது, அதை ஓட்ட வேண்டுமென திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்குப் பூஜை செய்ய அழைத்துச் சென்றுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் வரமறுத்து கண்ணமங்களத்தில் இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இரவு கண்ணமங்களம் பேருந்து நிலையத்தில் தங்கியுள்ளனர். 

 

இரவு தாய் மற்றும் சித்தி ஆகியோர் அந்தச் சிறுவனை அடி, அடி என அடித்துள்ளனர். அதோடு சிறுவனின் கழுத்தில் காலை வைத்து அழுத்திக் கொலை செய்துள்ளனர். இறந்தபின், வலிப்பு நோயால் அந்தச் சிறுவன் இறந்துவிட்டான் என அழுதுள்ளனர். ஆனால் அக்கம்பக்க கடைக்காரர்கள், இதுகுறித்து போலீசுக்குத் தகவல் சொல்ல அங்கு வந்த கண்ணமங்களம் போலீசார், 3 பெண்களை அழைத்துச் சென்று விசாரித்தபோது, பூஜை செய்து பேய் ஓட்டுவதாக கூறி அடித்தது, காலால் அழுத்திக் கொலை செய்தது ஆகியவை தெரியவந்துள்ளது. அவர்களை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.