குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், ஏற்கனவே நடந்த குற்றங்களின் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், கைதுசெய்யவும் சிசிடிவி கேமராக்கள் அத்தியாவசியம். இதுத்தவிர விபத்துகள் மற்றும் வன்முறைகள் ஆகியவற்றை நிகழும்போது அதை கண்காணிக்கவும் சிசிடிவி கேமராக்கள் அவசியம். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த சிசிடிவி கேமிராக்களை சென்னை முழுவதும் பொது இடங்களில் பொறுத்தவேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா. விசுவநாதன் இ.கா.ப. கேட்டுக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக அண்ணாநகர் டவர் பூங்கா, சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக நடிகர் விவேக் தயாரித்து நடித்த ‘மூன்றாவது கண்’ சிசிடிவி விழிப்புணர்வு குறும்படத்தை காவல் ஆணையர் விசுவநாதன் வெளியிட நடிகர் விக்ரம் பெற்றுக்கொண்டார். சிசிடிவியின் அவசியத்தை ஆணையர் தனது சிறப்புரையில் தெரிவித்தார். நடிகர் விக்ரம், சிங்கப்பூரைப்போல சென்னையிலும் பெண்கள் பயமின்றி நடமாடும் காலம் விரைவில் வரும். சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறையும். எனக் கூறியுள்ளார். இக்குறும்படத்தில் விக்ரம் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.