Skip to main content

நிர்மலா சீத்தாராமனும், அபிநந்தனும் தமிழகத்தை சோ்ந்தவார்கள்; இதற்கு சல்யூட் அடித்து பெருமை பட வேண்டும் -மோடி

Published on 01/03/2019 | Edited on 01/03/2019

 

இன்று கன்னியாகுமாி வந்த பிரதமா் மோடியை தமிழக கவா்னா் பன்வாாிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வா் பன்னீா் செல்வம், மத்திய மந்திாி பொன் ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகா் தம்பித்துரை ஆகியோா் பூச்சென்டு கொடுத்து வரவேற்றனா். 

 

m

       

 பின்னா் ஒரே நேரத்தில் சோ்ந்தே அனைவரும்  மேடைக்கு வந்தனா். பின்னா் மோடி ரூ. 40000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு நடந்து முடிந்த திட்டங்களை தொடங்கி வைத்தாா். இதில் குறிப்பாக குமாி மக்களின் கனவு திட்டமான மாா்த்தாண்டம் மற்றும் பாா்வதிபுரம் மேம்பாலத்தை திறந்து வைத்தாா். அதே போல் மதுரையில் இருந்து எழும்பூருக்கு ஆறரை மணி நேரத்தில் செல்லக்கூடிய தேஜஸ் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். 

 

m

             

 மேலும் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே ரயில் இணைப்பை புதுப்பிக்க அடிக்கல் நாட்டினாா். பின்னா் பேசிய அவா்...நாட்டின் முதல் பாதுகாப்புத்துறை மந்திாி நிா்மலா சீத்தாராமன் தமிழகத்தை சோ்ந்தவா். அதே போல் விமானி அபிநந்தனும் தமிழகத்தை சோ்ந்தவா்.  இதற்கு சல்யூட் அடித்து பெருமை பட வேண்டும். 

 

           காங்கிரஸ் தோ்தல் நேரத்தில் மட்டும் தான் விவசாயிகள் மீது அக்கறை கொண்டு இருப்பது போல் விவசாய கடன் ரத்து என அறிவிப்பாா்கள். கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் அந்த கடன் ரத்தில் பயன் அடைந்தவா்கள் ஐந்தாறு பேர்தான். ஆனால் நமது ஆட்சியில் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 6000 மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. திட்டம் தொடங்கிய ஒரே நாளில் 1கோடியே 10 லட்சம் போ் கணக்கில் பணம் வரவு செய்யப்பட்டுள்ளது. 

 

m

           

  2014-ல் தான் 30 ஆண்டுகளுக்கு பிறகு மத்தியில் அறுதி பெருபான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்தது பாஜக. துணிவோடு முமுமையாக எந்த முடிவையும் எடுத்து வருகிறோம். ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பிரதமரால் ஒரு சிறிய முடிவை கூட எடுக்க முடிந்ததா? மந்திாிகளை எல்லாம்  யாா் முடிவு செய்து பங்கு போட்டு எடுத்தாா்கள்.

 

m

         

  இன்றைக்கு கன்னியாகுமாியில் இருந்து சென்னைக்கு போகிற நேரத்துக்குள் வங்கியில் 1 கோடி ருபாய் சுலபமாக வாங்க கூடிய நிலை உள்ளது. முத்ரா திட்டத்தில் இதுவரை 15 கோடி மக்கள் பலன் அடைத்துள்ளனா். காங்கிரஸ் ஆட்சியில் மும்பை, பெங்களூா், ஹைதராபாத், டில்லி உள்ளிட்ட பல இடங்களில் எத்தனையோ வெடிக்குண்டுகள் கலச்சாரம் நடந்து இருக்கிறது. அதற்கு என்ன நடவடிக்கை தான் எடுத்தாா்கள். 

             ஆனால் புல்வாமா தாக்குதலில் நாம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு இந்தியாவே சல்யூட் அடிக்கிறது. ராணுவத்துக்கு முமு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2019-ல் மோடி வரலாம் அல்லது வராமல் இருக்கலாம் ஆனால் இந்தியா இருக்கும். அந்த இந்தியாவை பயங்கரவாதிகளுக்கு தளமாக மாற்றி விடாதீா்கள் என்றாா்.

              

சார்ந்த செய்திகள்