Skip to main content

தகுதி நீக்க வழக்கு: உங்களது எதிர்ப்புகளை சபாநாயகர் முன் தெரிவித்தீர்களா? நீதிபதி கிடுக்குப்பிடி கேள்வி

Published on 24/07/2018 | Edited on 24/07/2018


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி சத்தியநாராயணன் அமர்வில் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் "18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக அதிமுக கொறடா புகார் அளித்த போது, கட்சி முடக்கத்தில் இருந்தது. அதற்கு முன்னதாக முதல்வர் பழனிசாமியே சசிகலா அணியில் தான் இருந்தார்.

டிடிவி தரப்பின் மற்றுமொரு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் "ஆளுநர் முதல்வரை மாற்ற முடியாது என்பதும், எம்.எல்.ஏ-க்கள் தான் முதல்வரை முடிவு செய்கின்றனர் என்பதும் நன்கு அறிந்த ஒன்றாகும். எம்.எல்.ஏ.க்கள் என்ற முறையில் ஆளுநரை சந்தித்து மனு அளித்தது, முதல்வர் மீது நம்பிக்கை இல்லை, அதனால் முதல்வருக்கு அளிக்கும் ஆதரவை திரும்பப்பெறுவதாக கடிதம் கொடுத்தோம்.

எடியூரப்பா வழக்கில் பாஜக எம்.எல்.ஏ.-க்கள் செய்ததையே நாங்களும் செய்தோம். அவர்கள் செய்தது சரி என்றால், நாங்கள் செய்ததும் சரிதான். கட்சியின் அப்போதைய துணைப்பொதுச் செயலாளர் தினகரனின் அனுமதியோடு தான் கவர்னரை சந்தித்து முதல்வருக்கு எதிராக புகார் அளித்தோம். ஆனால் கர்னாடகாவில் நடந்ததை போல இங்கு எதிர்கட்சியுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டதாக கூறுவது தவறாகும். நாங்கள் முதல்வருக்கு எதிராக செயலட்டாலும், அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டோம்.

 

 

அப்போது நீதிபதி சத்தியநாராயணன்.... முதல்வருக்கு எதிராக புகார் அளிப்பது அரசுக்கு எதிராக அல்ல என கூறுகிறீர்களா??? என்றார்.

வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆமாம். எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்திக்க உரிமை உள்ளது.

மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் "சசிகலா சிறை சென்றபின் அணி மாறிய முதல்வர், அதன்பின்னர் பன்னீர் செல்வம் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தேர்தல் ஆணையத்தில் கட்சி விவகாரம் நிலுவையில் இருந்தபோது தகுதிநீக்க உத்தரவை சபாநாயகர் பிறப்பித்ததே தவறு. தேர்தல் ஆணைய முடிவு வரும் வரை காத்திருந்திருக்க வேண்டும். அதிமுக இல்லாத சமயத்தில், சபாநாயகரிடம் அளித்த புகாரில் அதிமுக கொறடா என்றே புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன்... ஆளுனரிடம் அளித்த புகாரிலும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் என்றுதான் குறிப்பிட்டுள்ளனர் என்றார்.

அப்போது நீதிபதி சத்தியநாராயணன்..... உங்களது எதிர்ப்புகளை சபாநாயகர் முன் தெரிவித்தீர்களா? என கேள்வி எழுப்பினார்.

சபாநாயகர் தனபால் தரப்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் " சபாநாயகரிடமும் தெரிவிக்கவில்லை. தலைமை நீதிபதி அமர்விலும் தெரிவிக்கவில்லை. அப்போது விவாதிக்கப்படாத விஷயத்தை இப்போது எழுப்ப முடியாது என்றார்.

இதையடுத்து, தகுதி நீக்க செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பு வாதங்கள் இன்று முடிந்தது. சபாநாயகர் மற்றும் பேரவை செயலாளர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் நாளையும் வெள்ளிக்கிழமையும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளார்.

சார்ந்த செய்திகள்