Skip to main content

தொடக்கப்பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

Published on 28/06/2021 | Edited on 28/06/2021

 

The Minister of School Education who went directly to the primary school and inspected it

 

திருச்சி கல்வி மாவட்டத்தில் இன்று (28.06.2021) எடமலைப்பட்டிபுதூர் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் தடுப்பூசி போட்டுக்கொண்டீர்களா என்று கேட்டு வினவினார். பின்னர் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிற ஸ்மார்ட் கிளாஸ் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார்.

 

மாணவிகள் அமைச்சரிடம் தாங்கள் கற்ற பல்வேறு பாடங்களை மனப்பாடமாக ஒப்பித்து காண்பித்தனர். அதனைத்தொடர்ந்து மாணவர்களுக்குப் புதிய கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை வழங்கினார். மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய கழிவறைகளை ஆய்வுசெய்தார். இன்று அந்தப் பள்ளியில் நூறாவது சேர்க்கையைத் தொடக்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப்  பேட்டி அளித்தார்.

 

The Minister of School Education who went directly to the primary school and inspected it

 

அப்போது அவர் பேசியதாவது, “தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கட்டணம் வசூலித்தால் பெற்றோர்கள் தயங்காமல் முன்வந்து புகார் அளிக்க வேண்டும். நீட் தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே. ராஜன் குழு பரிந்துரைக்குப் பிறகு முடிவு செய்யப்படும்”. இடைக்கால ஏற்பாடாக அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுமா? என்று கேட்டதற்கு, ஏ.கே. ராஜன் குழு பரிந்துரைக்குப் பிறகே முடிவு என்றார் அன்பில் மகேஷ்.

 

 

சார்ந்த செய்திகள்