கடந்த மூன்று நாட்களாக திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி சையது முர்துசா அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் நிலையில் அதனை இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் கரோனா நோய் தொற்று அதிக அளவில் பரவி வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் முகக்கவசம் அணிவது, எப்படி தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தமிழக முதல்வர் தொடர்ந்து முன்வைத்து வருகிறார். மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு பொருத்தவரை முதலில் மாணவ, மாணவிகளின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு தற்போதைக்கு தேர்வுகளை நடத்துவதற்கான சூழல் சரியாக அமையவில்லை. ஆனால் நிச்சயம் 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் நடைபெறும் என்றும், மருத்துவத் துறையின் அறிக்கையை கொண்டு தேர்வு நடக்கும் தேதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் நடைபெற்ற மாநில அளவிலான கல்வித்துறை தொடர்பான கூட்டத்தில் அந்தந்த மாநிலங்கள் பொதுத் தேர்வு நடத்துவதற்கான தேதி குறித்த விவாதங்கள் நடைபெற்றது.
அதில் பெரும்பாலான மாநிலங்கள் சிபிஎஸ்சி பள்ளிகளை மனதில் வைத்து பேசினார்கள். ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை நாங்கள் மாநில கல்வியை முன்வைத்து பேசியிருக்கிறோம் தேதிகளையும் நாங்களே முடிவு செய்வோம் என்றும் அறிவித்து இருக்கிறோம். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை பொருத்தவரை ஆன்லைன் மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் எந்த இணைய தளங்களையும் பயன்படுத்தாமல் மாணவர்கள் நேரடியாக வந்து மூன்று மணி நேரம் நிச்சயம் தேர்வு எழுதுவார்கள். அதற்கான பணிகளை நாங்கள் மேற்கொள்வோம் என்று தெரிவித்தார். பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கான ஒரு கூட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் விரைவில் அது அமைக்கப்பட்டு அந்த விசாகா குழுவின் மூலம் ஆன்லைன் வகுப்புகள் குறித்த பல்வேறு பரிந்துரைகளையும் கருத்துக்களையும் விவாதித்து அதன் பின் அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களின் மனநிலை பாதிப்படையாத வகையில் அவர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் மாணவர்களை எளிதாக கவரக்கூடிய பயிற்சி முறையையும் இந்த ஆலய முகப்பு மூலம் பயன்படுத்துவதற்கான பட்டங்கள் வரவேற்கப்படுவதாக கூறினார். தற்போது பப்ஜி என்ற இணையதள விளையாட்டானது மீண்டும் மாணவர்கள் மத்தியில் தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதன் மீதான நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட்டு அதை முழுவதுமாக தடை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த ஆன்லைன் வகுப்புகள் தடைபடுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது இணைய சேவை.
இந்த இணையவழி சேவை என்பது தற்போது தமிழகத்தில் சுமார் 60 லிருந்து 70 சதவீதம் மட்டுமே அந்த இணையவழி இணைப்புகள் சேவை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பல இடங்களில் செல்போன்களின் சேவை கிடைக்கப் பெறாமல் இருக்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே அந்தந்த மாவட்ட வாரியாக அவற்றை மேம்படுத்தி ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இன்னும் செல்போன் மூலம் இணைய முடியாத மாணவர்களுக்கு, நண்பர்களோ அல்லது பக்கத்து ஊர்களில் இருக்கக்கூடிய மாணவர்களின் கொண்டவர்களுக்கான தொகுப்புகளை கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.