Skip to main content

“நவீன விஞ்ஞானி செல்லூர் ராஜூ தவறான தகவலை தெரிவித்துள்ளார்..” - அமைச்சர் ஐ.பெரியசாமி  

Published on 11/06/2021 | Edited on 11/06/2021

 

 

Minister Periyasamy addressed press at dindigul


 திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ரவளிபிரியா ஆகியோருடன் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கரோனா தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

 

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “கடந்த பத்தாண்டுகளில் கூட்டுறவுத்துறையில் இருந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து சிறந்த துறையாக மாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான் முதல்வர் இந்த கூட்டுறவுத்துறையை எனக்கு கொடுத்து இருக்கிறார். அதன் மூலம் மற்ற துறைகளை விட இந்த கூட்டுறவுத்துறையை முதன்மை துறையாக கொண்டு வருவேன். ஏற்கனவே இரண்டு முறை சென்னையில் ஆய்வு கூட்டம் நடத்தி இருக்கிறேன். அதைத்தொடர்ந்து தஞ்சை, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகியவை மாவட்டங்களில் துறை ரீதியான ஆய்வு பணிகளை நடத்தியிருக்கிறேன். இன்னும் மற்ற மாவட்டங்களிலும் ஆய்வு செய்யவும் இருக்கிறோம்.

 

அதுபோல் தமிழகத்தில் உள்ள 4,451 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், தவறுகள் நடைபெற்று இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவுத் துறையில் பல குறைபாடுகள் உள்ளன. இதனை சரி செய்து வெளிப்படைத் தன்மையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய கூட்டுறவு வங்கியுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆன்லைன் மூலம் இணைக்கப்படவில்லை.  

 

இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் யார், யார் கடன் வாங்கி உள்ளனர் என்பதை ஆன்லைன் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என கடந்த 10 ஆண்டுகளாக  அதிமுக முன்னாள் அமைச்சர் நவீன விஞ்ஞானி செல்லூர் ராஜூ தவறான தகவலை தெரிவித்துள்ளார். துறையில் என்ன நடந்துள்ளது என்பது தெரியாமல் பேசியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் நகை கடன் வழங்கியதில் பல முறைகேடு நடந்துள்ளதாக புகார் வந்துள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணமே   இல்லாமல் எப்படி கடன் வழங்க முடியும். பல தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகையை அட மானம் வைத்து பணம் வழங்கியதாகவும், அதனை தள்ளுபடி செய்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடான முறையில் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்க தலைவர்கள் பதவிகளின் நிலை குறித்து சட்டம ன்ற கூட்டத் தொடருக்கு பின்பு முதல்வருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

 

தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் சிறந்த துறையாக மாற்றுவதற்காக இந்த துறையை முதல்வர் என்னிடம் தந்துள்ளார். இதனை சிறந்த துறையாக மாற்றுவேன். கடந்த 10 ஆண்டுகளாக கூட்டுறவு வங்கிகளில் புதிய உறுப்பினர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை. தற்போது புதிய உறுப்பினர்கள் சேர்க்கபடுவர். அதுபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம், நகை கடன் வழங்க நடவடி க்கை எடுக்கப்பட்டும். அதற்கான நிதியும் ஒதுக்கி கொடுக்கபடும். அதுபோல்  கூட்டுறவு வங்கிகளில் ஐந்து பவுனுக்கு நகை வைத்திருப்போர் கடன் தள்ளுபடி என்று முதல்வர் அறிவித்திருக்கிறார்; அதையும் கூடியவிரவில் தள்ளுபடி செய்ய இருக்கிறார்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்