Skip to main content

ப்ளட் ஆர்ட்; எச்ஐவி பரவும் அபாயம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

Minister ma Subramanian saidsaid to stop drawing blood art

 

மனிதர்களின் ரத்தத்தைப் பயன்படுத்தி ப்ளட் ஆர்ட் வரைவதைக் கைவிட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

 

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனா பரவல் சமயத்தில் ப்ளட் ஆர்ட் ஓவியம் வரைவது மிகவும் ஆபத்தானது எனத் தெரிவித்துள்ளார்.  மேலும் தமிழகம், இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் கூட ஒரு புதிய கலாச்சாரம் தலைதூக்கி வருகிறது. ப்ளட் ஆர்ட் என்ற ஓவியத்தை ரத்தத்தால் உருவாக்கி காதலன், காதலிக்கு அனுப்புவது என்ற புதிய கலாச்சாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

 

ரத்தத்தில் ஓவியம் வரைவதை சிலர் தொழிலாகவே நடத்தி வருகிறார்கள். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.  ரத்த தானம் என்பது பல உயிர்களைக் காப்பாற்ற உதவும் புனித கடமை. ஆனால் அந்த ரத்தத்தை எடுத்து படம் வரைவது சரியான ஒன்றல்ல. ரத்தத்தை மருத்துவர்கள் எடுக்கும்போது அதற்கான வழிமுறைகளைக் கையாளுகிறார்கள். எடுத்த ரத்தத்தைப் பாதுகாப்பார்கள். ஆனால் ஓவியத்திற்காக எடுக்கப்படும் ரத்தம் முறையான பாதுகாப்பு இல்லாமல் இருக்கும். அப்படி எடுக்கப்பட்ட ரத்தம் திறந்த வெளியில் இருக்கும் போது ஒரு வேலை அது எச்ஐவியால் பாதிக்கப்பட்டவரின் இரத்தமாக இருந்தால், மற்றவருக்கு நோய் பரவும் அபாயம் ஏற்படும்.

 

சென்னையில் இது போன்ற ப்ளட் ஆர்ட் நிறுவனம் செயல்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுக்கள் அங்கு சென்று அவர்கள் பயன்படுத்தும் ஊசிகள், வரைந்த ஓவியங்கள் அனைத்தும் பறிமுதல் செய்து, இத்துடன் இந்தத் தொழிலைக் கைவிடவேண்டும். இல்லை என்றால் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். நானும், இப்போது சொல்லிக் கொள்கிறேன் ப்ளட் ஆர்ட் வருவதை நிறுத்த வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'பாலியல் அத்துமீறல்; மருத்துவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் மா.சு உறுதி

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Legal action will be taken against the doctor'- Minister M. Su confirmed

நக்கீரன் அலுவலக முகவரிக்கு பெண் ஒருவரின் பெயரில், தலைநகரின் முக்கியப் பகுதியில் இருந்து ஒரு கொரியர் வந்தது. பிரித்து பார்த்த நமக்கு, அந்தக் கடிதம் இதயத் துடிப்பை அதிகரித்தது. அந்தக் கடிதத்துடன் ஒரு பெண் டிரைவும் இணைக்கப்பட்டிருந்தது. அதை சிஸ்டமில் போட்டுப் பார்த்தபோது, கடவுளாக மதிக்கும் மருத்துவர் ஒருவரின் செயல், நம்மை ஆட்டம்காண வைத்தது. அதுவும், மருத்துவமனைக்குள்ளே நடந்த அந்தச் சம்பவம் நம்மை நிலைகுலையச் செய்தது.

அந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பின்வருமாறு, இந்த பெண்ட்ரைவில், டாக்டர் சுப்பையா ஷண்முகம் மற்றும் ஆபரேஷன் தியேட்டர் செவிலியர் ஆகியோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் வளாகத்திற்குள், பாலியல் செயலில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்தச் செயலை அம்பலப்படுத்துவதன் நோக்கம் சுப்பையாவின் தொடர்ச்சியான பொருத்தமற்ற நடத்தையை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் சுப்பையா மீது விசாகா கமிட்டியின் உத்தரவுக்கு பிறகு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். விசாகா கமிட்டியின் தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய புற்றுநோய் மருத்துவமனைக்கு சுப்பையா சண்முகத்தை இடமாற்றம் செய்து விட்டோம். இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகு விசாகா கமிட்டியின் உத்தரவு வரும். வந்தவுடன் அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Next Story

உயிரிழப்பு அதிகரிப்பு; கள்ளக்குறிச்சி விரையும் அமைச்சர்கள்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
 increase in casualties; Kallakurichi rushing ministers

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், அதனைப் பத்துக்கும் மேற்பட்டோர்கள் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் சாராயம் குடித்த ஜெகதீஷ், பிரவீன், சுரேஷ், சேகர் ஆகிய 4 பேர் கள்ளச்சாரம் அருந்தி உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட ஆட்சியர் தரப்பில் உயிரிழப்பு கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்ததா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனச் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் மறுபுறம் கள்ளச்சாராயம் குடித்ததாலேயே நான்கு பேர் இறந்துள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை மேற்கொண்டு வந்த சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்று கோவிந்தராஜனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணிகண்டன்(35),  மற்றும் மேலும் இருவர் என உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.